ராமேஸ்வரம் சீக்கிய குருத்துவாரா மடத்தில் ராமநாதபுரம் தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம். முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, வேங்கடபதி, சுப.தங்கவேலனுடன் வேட்பாளர் முகம்மது ஜலீலும் பங்கேற்றார். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏகப்பட்டோர் கூடிவிட்டனர். 'தலைக்கு 150 ரூபாய்... போக்குவரத்துக்கு 100 ரூபாய்’ எனச் சொல்லி அவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் பறக்க... ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கே பணப்பட்டுவாடா எதுவும் நடக்கவில்லை. சிலரது கைகளில் மட்டும் துண்டு சீட்டுகள் திணிக்கப்பட்டன. அதை வாங்கிக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சி பொங்க புறப்பட்டார்கள். விசாரித்தால், 'நாலு பேருக்கு ஒரு டோக்கன். டோக்கனுக்கு ஆயிரம் ரூபாய்!’ என்று விவரம் சொன்னார்கள். பட்டுவாடா பணி, பல்வேறு இடங்களில் நடந்ததாம்!

- இரா.மோகன்

வாசு விக்ரம் கேள்வி!

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது ம.தி.மு.க-வினர் யாரும் குடிபோதையில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு செல்லக் கூடாது; தேர்தல் அலுவலகத்துக்கு வரக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுள்ளார். இந்த நிலையில் விருதுநகரில் வைகோவுக்கு ஆதரவாக அவரது வாகனத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டுச் சென்றார். அதற்கு பிறகு, விருதுநகரில் தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் வாசு விக்ரம், ''குடித்துவிட்டு யாரும் வாக்குக் கேட்டு போகக் கூடாது என்று கட்சிக்காரர்களுக்கு வைகோ அட்வைஸ் செய்தாராம். பிறகு எப்படி குடிகாரரான விஜயகாந்த்தை தன் பிரசார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வாக்குக் கேட்டுப் போனார். கட்சிக்காரர்களுக்கு ஒரு நியாயம், விஜயகாந்த்துக்கு ஒரு நியாயமா?'' என்று விளாசித்தள்ளினார்.

- எம்.கார்த்தி

கருணாநிதியின் ஹைடெக் வேன்!

கருணாநிதி வழக்கமாகப் பிரசாரம் செய்யும் வேனை மாற்றி புதிய ஹைடெக் பிரசார வேனை கோயம்புத்தூரில் இருந்து வாங்கி வந்திருக்கிறார்கள். அந்த வேனில் பல பிரத்யேகமாகன வசதிகள் கருணாநிதிக்காகவே செய்யபட்டிருக்கின்றன. வேனில் அமரும் அவரது இருக்கை 360 டிகிரியிலும் சூழலுமாறு அமைத்து இருக்கிறார்கள். அவரது சேர் அப்படியே வேனில் இருந்து வெளியே வருவதற்கும், உள்ளே பொருந்திகொள்வதற்கும் வசதியாக ஹைட்ராலிக் லிஃப்ட் வசதி செய்திருக்கிறார்கள். இந்த வேனின் பின்புறம் அட்டாச்டு பாத்ரூம் வசதியும் இருக்கிறது. இந்த வேனில் அவருடன் ராஜாத்தி அம்மாள், துரைமுருகன், உதவியாளர் சண்முகநாதன், உதவியாளர் நித்யா மற்றும் குடும்ப மருத்துவர் ஆகியோர் செல்கின்றனர். இந்தப் பிரசார வேனைப் பார்க்கவே கூட்டம் கும்முகிறது.

- தி.விஜய்

'கட்டிப்பிடிக்கிறேன்... போட்டோ எடுத்திருங்க!’

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவை தொகுதி வேட்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம். சற்று தாமதமாக வந்த தி.மு.க-வின் கணேஷ்குமார், அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். உடனே அலறி அடித்து எழுந்த நாகராஜன், இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்தார். பின்னர் மைக் பிடித்தபோது, ''அழைப்பிதழில் பெயர் குறிப்பிட்டிருந்த வரிசைப்படி அமர்ந்தேன். வேறு எந்தக் காரணமும் இல்லை'' என்று சமாளித்தார். பின்னர் தி.மு.க. வேட்பாளரைத் தவிர மற்றவர்களுக்கு கை குலுக்கிவிட்டுப் புறப்பட தயாரானார். அப்போது பத்திரிகை புகைப்படக்காரர்களிடம் கணேஷ்குமார், ''நான் அவரைக் கட்டிப்பிடிக்கிறேன்... நீங்க போட்டோ எடுத்திருங்க!'' என்று குறும்பாகச் சொல்ல... வேக வேகமாக இடத்தைக் காலிசெய்தார் நாகராஜன்.

- தி.விஜய்

கறார் முத்தையன்!

விழுப்புரம் தி.மு.க. வேட்பாளர் முத்தையன், பிரசாரத்துக்கு வரும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மதிய சாப்பாடுகூட வாங்கித்தருவது இல்லை. தொண்டர்கள் செலவுக்குப் பணம் கேட்டால், 'மந்திரியைப் போய் பாரு’ என்று பொன்முடியைக் கைகாட்டிவிடுகிறார். தன்னைக் கேட்காமல் யாருக்கும் செலவு செய்யக் கூடாது என்று பொன்முடி கட்டளையிட்டுள்ளதால், அளந்து அளந்து பணத்தைச் செலவு செய்கிறாராம். தினமும் பிரியாணி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்த தொண்டர்கள், ஏமாற்றமடைந்து தங்கள் கை காசை செலவுசெய்து வருகின்றனர். சாப்பாடுகூட வாங்கித்தராத இவருக்கு ஏன் வெயிலில் படாத பாடுபட்டு பிரசாரம் செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர்.

- நந்தகுமார்

திணறவைக்கும் திருமங்கலம்!

தேர்தல் பிரசாரத்துக்கு திருமங்கலம் செல்லும் வேட்பாளர்கள் எல்லாம் அரண்டுபோகின்றனர். காரணம், பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களிடம், 'இந்த முறை எவ்வளவு கொடுப்பீங்க?’ என்று திருமங்கலவாசிகள் நேரடியாகவே கேட்டு திணறடிக்கிறார்களாம். அதோடு, ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல கவனிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏகப்பட்ட ஆரத்தி தட்டுகளுடன் மக்கள் காத்திருக்கிறார்களாம். 'நல்லா கெடுத்து வெச்சுருக்காங்கய்யா இந்த ஊர்க்காரங்கள’ என்று சலித்தபடி திரும்புகின்றனர் வேட்பாளர்கள்.

- எம்.கார்த்தி

வெயிலில் செல்வி!

தயாநிதி மாறன் வேட்புமனுத் தாக்கலின்போது கருணாநிதியின் மகள் செல்வியும் உடன் வந்திருந்தார். ஐந்து பேருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என அலுவலர்கள் சொல்ல, 'நீங்க மனுத் தாக்கல் செய்யப் போங்க. நான் கட்சிக்காரர்களுடன் இருக்கிறேன்’ என சொல்லி, தயாநிதி மாறன் வரும் வரை கொளுத்தும் வெயிலில் கட்சிகாரர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். 'தலைவர் மகள் இவ்வளவு சாதாரணமாகப் பேசுறாங்களே’ என்று உடன்பிறப்புகளுக்கு மகிழ்ச்சி!

- ஜெ.வேங்கடராஜ்

'நான் ஒரு நம்பர் தர்றேன்!’

நாகை அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலிடம் 'நாளை எங்கு பிரசாரம்?’ என யார் போன் செய்து கேட்டாலும், 'நான் ஒரு நம்பர் தர்றேன். அதுக்கு போன் பண்ணி கேட்டுக்குங்க’ என்று சொல்லி ஒரு செல் நம்பரைத் தருகிறார். அந்த எண்ணுக்கு டயல் செய்தால், எதிர் முனையில் அமைச்சர் காமராஜ் பேசுகிறார். தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில், வேட்பாளரின் பயணத் திட்டங்களை காமராஜ்தான் கவனித்துக்கொள்கிறாராம். அமைச்சரை நம்பர் ஆக்கிட்டாரே வேட்பாளர்?

- மாணிக்கவாசகம்

திருமாவை விரட்டிய தேனீக்கள்!

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், கடந்த 8-ம் தேதி அரியலூர் மாவட்டம்

திருமானூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் வெங்கனூரில் உள்ள தென்னந்தோப்பில் சாப்பிட்டார். அப்போது கட்சி தொண்டர் ஒருவர், மூங்கில் மரத்தில் இருந்த தேனீ கூட்டை கண்டு ஆர்வக்கோளாறில் அதில் கல் வீசியிருக்கிறார். அவ்வளவுதான்... தேனீக்கள் கூட்டம் அனைவரையும் விரட்டத் தொடங்கியது. திருமா உட்பட அனைவரும் உணவு பொட்டலங்களைப் போட்டுவிட்டு அவசர அவசரமாக இடத்தைக் காலி செய்துள்ளனர். அப்படியும் திருமாவளவனின் நெற்றியில் தேனீக்கள் கொட்டிவிட்டன.

- எம்.திலீபன்

இன்னொரு ஹெலி!

ஜெயலலிதா பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் உங்கள் அனைவருக்கும் தெரியும். இது என்ன புது ஹெலிகாப்டர் என்று கேட்கிறீர்களா? இது ஜெயலலிதாவின் பிரசார ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நால்வர் குழு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்!

- கே.குணசீலன்

வரவேற்பு மாறிப் போச்சு!

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜை ஆதரித்துப் பிரசாரம் செய்ய தியாகதுருகம் வந்துகொண்டிருந்த பரிதி இளம்வழுதிக்கு வரவேற்பு அளிக்க காத்திருந்தனர் அ.தி.மு.க-வினர். அப்போது நான்கு கார்கள் அணிவகுத்து வர, 'அண்ணன் வந்துட்டார்’ என்று கத்தியபடியே காருக்கு முன் பட்டாசுகளை வெடித்து வரவேற்பு அளித்தனர் தொண்டர்கள். காருக்குள் இருப்பது தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் என்று பிறகுதான் தெரிந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். கார் கண்ணாடியை இறக்கி, சிரித்தபடியே வரவேற்பை ஏற்றுக்கொண்டு கிளம்பினார் மணிமாறன்.

- நந்தகுமார்

காங்கிரஸ் சின்னம் இரட்டை இலை!

பாகூர் பகுதியில் பிரசாரம் செய்தபோது புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரான மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு சோதனை. ''உங்கள் சின்னம் கை சின்னம், உங்கள் ஓட்டு...'' என்று கேட்டு நாராயணசாமி நிறுத்த, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் முந்தைய கூட்டத்துக்குச் சென்றுவந்த ஞாபகத்திலோ, என்னவோ 'இரட்டை இலை’ சின்னத்தை உயர்த்திக் காட்ட முகம் சிவந்துவிட்டார். உடனே தனது கையை உயர்த்தி 'உங்கள் சின்னம் கை சின்னம்’ என்று சொல்லி சமாளித்தார் நாராயணசாமி.

- ஜெ.முருகன்

குஷியில் கனி!

பல தேர்தல்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பயன்படுத்திய பிரசார வேன், கனிமொழிக்கு கைகூடி வந்திருக்கிறது. ஜிழி 67 கிதி 6666 என்ற பதிவு எண் கொண்ட டெம்போ டிராவலர், கருணாநிதியின் சென்டிமென்ட் வேன். தமிழகம் முழுவதும் கருணாநிதி பிரசாரம் போக முடியாமல் போனாலும், அவர் பயன்படுத்திய வேன், கனிமொழி மூலம் பயணப்படுகிறது.

- சு.கு.

அசராத ராஜி!

மதுரையில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த ராஜி சுபாஷ் என்பவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு மதுரை பொதுமக்கள் பலர் 'உச்’ கொட்டுகின்றனர். ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய சுபாஷ் என்பவரின் மனைவிதான் இந்த ராஜி. 'அரசியல் கட்சிகள் எதுவும் மதுரையில் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை’ என்ற காரணத்தால், வணிகவரித் துறை துணை கமிஷனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில்தான், அவருடைய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ''கண்டிப்பாக அடுத்தத் தேர்தலில் போட்டியிடுவேன்'' என்கிறார் ராஜி சுபாஷ்.

- செ.சல்மான்

கூட்டணியில் சீட் இல்லாவிட்டாலும் வாலண்டியராக வந்து இலைக்கு ஓட்டுக் கேட்கும் உதிரி கட்சிகளுக்கு தலைநகரில் மரியாதை குறைவாம். அ.தி.மு.க-வின் கோட்டை பெண் பிரமுகர் அடித்து விரட்டாத குறையாக அவர்களை அவமரியாதையாக நடத்துவதாகப் புலம்பல்கள் கேட்கின்றன.

சென்னைக்கு வடக்கே தலைவி நடத்திய பிரசாரத்துக்குக் கூட்டம் சேர்க்க கிராமம், நகரம், ஒன்றியம் என்று அனைத்து தரப்பு நிர்வாகிகளுக்கும் டார்கெட் நிர்ணயித்து நிர்பந்தப்படுத்தினாராம் மதுபான பிராண்ட் பெயர் கொண்ட பிரமுகர். ஆனால், கூட்டிய கூட்டத்துக்குத் தகுந்த மாதிரி காந்தி நோட்டை கண்ணில் காட்டாததால், கவலையில் ஆழ்ந்துள்ளனர் நிர்வாகிகள்.

தலைவி வந்து இறங்கும் ஹெலிகாப்டருக்கு ஹெலிபேட் அமைக்க வேண்டும் என்று காரணம் காட்டியே காதலை சொல்லாத பழைய நடிகரின் பெயரைக் கொண்ட பிரமுகர் நெடுஞ்சாலையூரில் மணல் லோடுகளாக வாங்கி தன் சொந்த கட்டடத் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டாராம்.