காங்கிரஸ், பி.ஜே.பி., கம்யூனிஸ்ட்கள், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 16-வது மக்களவைத் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தே.மு.தி.க-வும், வழக்கமாக வெளியிடும் பா.ம.க-வும் இந்த முறை இது எல்லாம் நமக்குத் தேவையில்லை என்று ஒதுங்கிவிட்டன.

அறிக்கைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போமா?

தி.மு.க.

ரவுண்டாக 100 வாக்குறுதிகள். அத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க-வின் சாதனைப் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.

முரசொலி மாறனின் தோகா மாநாட்டு உரை, தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம், தொடங்கிய நிலையிலே முடங்கிக்கிடக்கும் சேது சமுத்திரத் திட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு, பொடா சட்டம் ரத்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோவையில் உலகத்தரத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் என்று சாதனைப் பட்டியல் அடுக்கப்பட்டு உள்ளது.

அறிக்கை முழுவதையும் தேடினாலும் 2ஜி என்ற வார்த்தை சிக்கவில்லை.

நிறைவேற்றப்போகும் திட்டங்களாக, கூட்டாட்சி முறை, மதச்சார்பின்மை, சமூக நீதி, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு பத்தி விவரிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.

தமிழ்நாடு தொடர்பான வாக்குறுதிகள், தேசிய அளவிலான வாக்குறுதிகள் என்று கட்டம் கட்டி 43 வாக்குறுதிகளைச் சொல்லியுள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் நலன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, கச்சத்தீவு மீட்பு, தமிழ் ஆட்சி மொழி, பொது விநியோகத் திட்டம், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, மின்சார வழித்தடங்களை வலுப்படுத்துதல் மற்றும் புதிதாக ஏற்படுத்துதல், அரசு கேபிள் டி.வி-க்கு அனுமதி என்று வேறுசில வாக்குறுதிகள். தேசிய அளவிலான வாக்குறுதிகளில் மதச்சார்பின்மை, சமூக நீதி, மகளிர் நலன், மகளிர் இட ஒதுக்கீடு, நதிகள் இணைப்பு, வெளியுறவுக் கொள்கை, கறுப்புப் பணத்தை மீட்டெடுத்தல் என நீள்கிறது.

ம.தி.மு.க.

கச்சத்தீவு, மீனவர் நலன், தமிழ் வழக்காடு மொழி என்று மற்றக் கட்சிகள் சொல்வதையே அவரும் சொன்னாலும்கூட, மற்ற யாரும் சொல்லாத, சொல்லத் தயங்கும் விஷயங்களை வைகோ சொல்லியுள்ளார். முதல் வாக்குறுதியே, இந்தியா என்பதை மாற்றி இந்திய ஐக்கிய நாடுகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது. விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்றுதல், மாநில சுயாட்சி, ஈழம் ஒன்றே தீர்வு என்ற வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை வைகோவின் தேர்தல் அறிக்கைக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறது!

காங்கிரஸ்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அவர்கள் செய்த ஒரு சில நல்ல விஷயங்கள்தான் அவர்களுடைய தேர்தல் அறிக்கை. 100 நாள் வேலைத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகளிர் இட ஒதுக்கீடு, விவசாயக் கடன் ரத்து, உணவுப் பாதுகாப்புச் சட்டம், சிறுபான்மையினர் நலன் என்று பட்டியல் போட்டுள்ளனர்.

பி.ஜே.பி.

அயோத்தியில் ராமர் கோயில், இந்தியா முழுவதற்கும் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து என்ற வாக்குறுதிகள் திகில் கிளப்பியுள்ளன. குறைந்தபட்சம் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைக்கான திட்டம்கூட இல்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம்; மற்ற அனைத்துத் துறைகளிடம் அந்நிய முதலீட்டை ஆதரிப்போம் என்று சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தியதுதான் மிச்சம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள்

மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிடும்போது, கம்யூனிஸ்ட்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அவர்களுடைய அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள், நிதி ஆதாரங்களைத் திரட்டுவது, நிதித்துறை ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, உலக வர்த்தகப் பிரச்னைகள், கூட்டாட்சித் தத்துவம், தொழில் துறை, கனிமத் துறை, கைவினைஞர்கள், நெசவாளர்கள், பாரம்பரியத் தொழில்கள், உணவுப் பாதுகாப்பு என நுணுக்கமாக அலசி உள்ளனர். வெளியுறவுக் கொள்கை என்ற பத்தியில் ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லி இருப்பதும் இன அழிப்பு என்ற வார்த்தைக்குப் பதிலாகக் கொடுஞ்செயல்கள் என்று குறிப்பிட்டு இருப்பதும் நெருடல்.

இதுவரை 15 தேர்தல் அறிக்கைகளைப் பார்த்துவிட்ட மக்கள், பத்தோடு பதினொன்றாக இவற்றையும் வைத்துக்கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

- ஜோ.ஸ்டாலின்