நூறு ரூபாய்க்கு இவ்வளவு தூரம்தான்!

ஸ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார் அமைச்சர் சின்னையா. அவருடன் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூ வீலரில் கொடிகளைக் கட்டிக்கொண்டுச் சென்றனர். பாதி பிரசாரத்திலேயே பைக்குகளை நிறுத்திவிட்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்கள். காரணம் கேட்டபோது, 'நூறு ரூபாய்க்குத்தான் பெட்ரோல் போட்டுக் கொடுத்தாங்க. அதுக்கு இவ்வளவு தூரம்தான் வர முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கடுப்பான சின்னையா, ஆட்களை ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகியை காய்ச்சி எடுத்திருக்கிறார். பிறகு அனைத்து பைக்குகளுக்கும் தாராள பெட்ரோல் சப்ளை கிடைக்க... பிரசாரம் தொடர்ந்தது.

- பா.ஜெயவேல்

கருணாநிதி வரும் நேரம்... காலியான அரங்கம்!

விழுப்புரம் தி.மு.க. வேட்பாளர் முத்தையனை ஆதரித்து மரக்காணத்தில் கருணாநிதி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம். கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மேடைக்கு முன்பு குத்து டான்ஸ் நடந்தது. மேடை ஏறிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவர்களை வேறு இடத்துக்குச் சென்று ஆடும்படி சொல்லிவிட்டு, தொண்டர்களை ஒழுங்குப்படுத்தினார். கருணாநிதி வரும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்க... பொதுக்கூட்ட அரங்கில் சேர்கள் கிட்டத்தட்ட காலி. குத்து டான்ஸ் குழு, அரங்க நுழைவாயிலில் ஆடிக்கொண்டிருக்க, கட்சியினர் அனைவரும் வெளியில் நின்று அதில் லயித்திருந்தனர். டென்ஷனான பொன்முடி, ''ஆட்டம் போட்டது போதும். நீங்க கௌம்புங்க'' என்று குத்தாட்டக் குழுவினரை அப்புறப்படுத்திய பிறகுதான், உடன்பிறப்புக்கள் உள்ளே வந்தனர்.

- ஜெ.முருகன்

வடக்கு சென்டிமென்ட்!

''வடக்கு நோக்கிய தேர்தல் பயணம் என்பதால், வடக்கில் இருந்து பிரசாரம் தொடங்க வேண்டும்'' என்று ஜோசியர் சொன்னதால், தமிழகத்தின் வட மாவட்டமான காஞ்சிபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. வடக்கு நோக்கி மேடை இருக்க வேண்டும் என்பதற்காக தேரடியில் நடக்கவிருந்த கூட்டம், கடைசி நேரத்தில் பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டது. அதேபோல் வடக்கிலேதான் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறாராம். எனவே, முதல்வரின் பிரசாரப் பயணத்தை வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கத்தில் நிறைவுசெய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

- பா.ஜெயவேல்

ஏன் மறைமுகமா படம் எடுக்குறீங்க?

தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்தார் மு.க.ஸ்டாலின். அவருடன் வந்த துர்கா, அண்ணாமலையார் கோயிலுக்குக்கு விசிட் அடித்தார். அர்ச்சனைத் தட்டை நீட்டியவுடன் ''அர்ச்சனை யார் பேருக்கும்மா'' என்று அர்ச்சகர் கேட்க, அதற்கு துர்கா ''ஐயா பேர் தெரியாதா... அவர் பேருக்கே செய்யுங்க'' என்றார். இதைப் பத்திரிகையாளர்கள் மறைவாக இருந்து படம் பிடிக்க... ''ஏன் மறைமுகமா படம் பிடிக்கிறீங்க. கிட்ட வந்து நல்லா கோயில் கோபுரம் தெரியுற மாதிரி படம் எடுங்க'' என்றார். பிறகு, பிரகார வலம் வந்தபோது வெயில் வாட்டி வதைக்க, ''இந்தக் கோயிலில் பேட்டரி கார் இருக்குமே... அது இல்லையா?'' என்று கேட்டார். பேட்டரி காரும் வந்தது. அது, ஜெயலலிதா இலவசமாகக் கொடுத்தது. அதில் ஜெயலலிதா படம் போட்டிருந்ததைப் பார்த்த துர்கா, ''எனக்கு இந்த வண்டி வேண்டாம். நான் நடந்தே போகிறேன்'' என்று வெயிலில் நடந்தே கோயிலைச் சுற்றினார்.

- க.பூபாலன்

கணவருக்காகக் களமிறங்கிய சாவித்திரி!

புதுச்சேரி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கம். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதுவரை அரசியலுக்காக வெளியே தலைகாட்டாதவர் ஓமலிங்கத்தின் மனைவி சாவித்திரி. இப்போது, கணவனுக்கு வாக்குக் கேட்டு தொகுதியில் உள்ள வீடுகளுக்குள் குங்குமச் சிமிழுடன் நுழைகிறார். ஆன்மிக சித்தர் வழியில் ஓமலிங்கம் ஆர்வம் உள்ளவர் என்பதால், அதிர்ந்து பேசாத டைப். ஆனால், அவர் மனைவி சாவித்திரியோ, வாக்கு சேகரிப்பில் பாப்கார்னாகப் பொரிகிறாராம். தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள சாதனைகள் ஒவ்வொன்றையும் சொல்லி, 'இது நம் மாநிலத்துக்கு வேணுமா?' என்று கேள்வி - பதில் பாணியில் கேட்கிறாராம். 'என் கணவரை இங்கே ஜெயிக்கவைத்தால், தமிழகத்தில் கிடைப்பது அனைத்தும் இங்கேயும் கிடைக்கும்’ என்று வாக்கு சேகரிக்கிறாராம். சாவித்திரி வீசும் பவுலிங் மாற்றுக் கட்சி வேட்பாளர்களைத் திகைக்க வைத்திருக்கிறது.

- கனிஷ்கா

சமவெளி பகுதி... மலை எஃபெக்ட்!

நீலகிரி தொகுதிக்குப் பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, ஏனோ மலை மீது ஏறவில்லை. சமவெளிப் பகுதியான கோவை மாவட்டம் காரமடை ஏரியாவில் பிரசாரத்துக்காக மேடை போட்டிருந்தார்கள். ஊட்டி பசுமை எஃபெக்ட்டைக் காட்ட வேண்டும் என்பதற்காக, வழக்கான மேடை அலங்காரத்தில் மாற்றம். மேடைக்கு முன்பு ஊட்டியை நினைவுபடுத்தும் வகையில் செயற்கை புல் தரை உருவாக்கப்பட்டிருந்தது.

- தி.விஜய்

ஆங்கில சேனல்கள் வரலையா?

சிவகங்கை தொகுதியில் தன் மகன் கார்த்தி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிர பிரசாரம் செய்துவரும் ப.சிதம்பரம், சமீபத்தில் மதுரையில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். அவர் மத்திய அமைச்சராக இருந்த இத்தனை ஆண்டுகளில் சிவகங்கை, காரைக்குடி பத்திரிகையாளர்களிடம் பேச விரும்ப மாட்டார். அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடுவதோடு சரி... தேர்தல் நேரம் என்பதால் கரிசனம்! ''பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை பற்றி கருத்துச் சொல்லத்தான் மதுரை வந்தேன். ஏனென்றால் இங்குதான் தேசிய சேனல்கள், பத்திரிகைகளின் நிருபர்கள் இருப்பார்கள்'' என்றவர், தனக்கு முன்னால் அடுக்கப்பட்டிருந்த மைக்குகளின் லோகோக்களைப் பார்த்தார். எல்லாமே தமிழ்நாட்டு சேனல்களாக இருந்தன. ''ஆங்கில சேனல்கள் யாரும் வரலையா?'' என்று வருத்தப்பட்டவரிடம், ''பி.டி.ஐ. நிருபர் வந்திருக்கிறார். ஆங்கிலப் பத்திரிகைகள் வந்திருக்கின்றன'' என்று சொன்னவுடன் கொஞ்சம் திருப்திப்பட்டு பேட்டியை ஆரம்பித்தார்.

- சல்மான்

ஜெ. வழியில் ரங்கசாமி!

'செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகளை ரங்கசாமி உல்டாவாக பயன்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் தொகுதி செயல்வீரர் கூட்டங்களில், ''23 வருடங்கள் புதுவையில் எம்.பி-யாக இருந்த நாராயணசாமி மாநில வளர்ச்சிக்காக எதுவுமே செய்யவில்லை. மாநில அரசுக்கு பல நெருக்கடிகளைத்தான் கொடுத்து வந்தார். ஒண்ணுமே செய்யாத நாராயணசாமிக்கு உங்க ஓட்டுகளைப் போடுவீங்களா? நீங்க போடுவீங்களா?'' என்று கூடியிருந்த தொண்டர்களிடம் கேட்டு, ''போட மாட்டோம்... போட மாட்டோம்!'' என்று பதிலைப் பெறுகிறார் ரங்கசாமி.

- அறவாழி

''வழக்குப் போட்டா, அதுவும் பப்ளிசிட்டிதான்!''

தமிழகத்தில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களைப் பற்றி மீடியாக்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் காம்ரேட்களுக்கு உள்ளது. இந்த நிலையில் சிவகங்கையில் ஒரு சம்பவம். இந்தத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான கிருஷ்ணன், சற்று வசதி படைத்தவர். சில தினங்களுக்கு முன்னர் மானாமதுரை பகுதியில் அவர் பிரசாரம் செய்தபோது சிலர் ஆரத்தித் தட்டுகளை நீட்டினர். கிருஷ்ணனும் தன் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை ஆரத்தி எடுத்தவர்கள் தட்டில் போட்டார். அவ்வளவுதான்... அவர்கள் பின்னால் வந்த தேர்தல் பறக்கும் படையினர் அவர் மீது பணம் கொடுத்தாக வழக்குப் பதிந்தனர். ''நம்மளை மீடியாக்கள் கண்டுக்காம இருந்தாங்களே... இப்ப வழக்குப் போட்டதால், எப்படியும் செய்தி போட்டுத்தானே ஆகணும்'' என்று தன்னுடன் பிரசாரத்துக்கு வந்த தோழர்களிடம் கெத்தாகச் சொன்னார்.

- அபுதாஹிர்

'சிலர் உங்களை ஏமாத்தப் பார்க்குறாங்க!’

தென் சென்னை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி.ரமணியை ஆதரித்து நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் மயிலாப்பூரில் பிரசாரம் செய்தார். ''நீங்க யாருக்கு ஓட்டுப் போடணும்னு முடிவு பண்ணிட்டீங்க. ஆனால், சிலர் உங்களை ஏமாத்தப் பார்க்குறாங்க. எனக்குத் தெரியும்... மயிலாப்பூர் மக்கள் அறிவாளிகள். அவங்களை யாரும் ஏமாத்த முடியாது. ஏன்னா நானும் மயிலாப்பூர்க்காரன்தான்!'' என்று பஞ்ச் வைத்தார் கார்த்திக். அடடே!

- காவ்யா

சூறாவளி அன்பழகன்!

தி.மு.க. தலைவர் கருணாநிதியைவிட வயதில் சீனியர், பேராசிரியர் அன்பழகன். தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியைவிட சூறாவளி வேகத்தில் சுழன்று வருகிறார். ''நெசவாளர்களை வாழவைக்க இலவச வேட்டி சேலை திட்டத்தைக் கொண்டுவந்தார் கலைஞர். ஆனால், இங்கு இருக்கும் நெசவாளர்களைப் புறக்கணித்துவிட்டு ஒடிசாவில் இருந்து வேட்டி சேலையை வாங்குகிறார், இந்த சேலை கட்டிய பெண்மணி'' - இப்படி அதிரடியாக போட்டுத்தாக்குகிறார். நாள் ஒன்றுக்கு ஐந்தாறு கூட்டங்களில் பேசி யூத்களுக்கு சவால் விடுகிறார், 91 வயதான பேராசிரியர் அன்பழகன். வெயில் நேரத்தில் பிரசாரம் செய்ய நேரம் சொன்னாலும் தயங்காமல் செய்கிறார்.

- சு.கு.

ஜெயலலிதாவுக்கு 111

''அவசரப் போலீஸுக்கு 100, தீயணைப்புக்கு 101, ஆம்புலன்ஸுக்கு 108, பொய் புரூடாவுக்கு ஜெயலலிதாவின் அறிவிப்பாணை 110, அவர் தமிழ்நாட்டு மக்களின் நெற்றியில் போடுவது 111'' என்று அடுக்கி அனைவரையும் அசர வைத்தார் மு.க.ஸ்டாலின். திருவண்ணாமலை தேர்தல் பிரசார கர்ஜனையில், இது மட்டுமல்ல... இன்னும் உண்டு. ''அச்சம் என்பது மடமையடா... என்ற பாடலை ஜெயலலிதா பிரசாரத்தில் பாடி வருகிறார். இப்போது கண்ணதாசன் இருந்திருந்தால், இப்படிதான் எழுதியிருப்பார்'' எனச் சொன்னவர், ''அம்மா என்பது மடமையடா... அம்மாவைப் பார்ப்பது கடினமடா... வறுமையில் சாவு... கொலையில் சாவு... நாளை தமிழகம் காப்பது கலைஞரடா...'' என்று ராகம் போட்டு பாட, குதூகலித்தது கூட்டம்.

- காசி.வேம்பையன்

உஷ்... ரகசியம்!

** வெயிலூர் இலைக் கட்சி வேட்பாளர், 'ரொம்ப டயர்டா இருக்குப்பா. ரெண்டு நாளைக்குப் பிரசாரத்தை ரத்து பண்ணிடுங்க. என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க’ என்ற டயலாக்கை அடிக்கடி உதிர்த்துக்கொண்டு இருக்கிறாராம். ஏற்கெனவே கோஷ்டிப் பூசல்களால் கட்சியே டேமேஜ் ஆகிக் கிடக்கும்போது இவரும் கூடுதலாக டேமேஜ் செய்யப் பார்க்கிறாரே என்று புலம்புகின்றனர் தொண்டர்கள்.

** அவங்களைக் கூப்பிட்டா நாங்க வர மாட்டோம் என்று கூட்டணி கட்சியும், கட்சி சார்ந்த சாதி சங்கமும் முறுக்கிக்கொண்டு திரிவதால், இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்த படாதபாடுபடுகிறாராம் கோவிலூர் பம்பரக் கட்சி வேட்பாளர்.