மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வாசுகி. சென்னை தொகுதிகளின் ஒரே பெண் வேட்பாளரும்கூட!

காலையில் பிரசாரம் தொடங்கும் இடத்துக்கு கம்யூனிஸ்ட் தோழர்களும் மாதர் சங்கத் தோழர்களும் ஆஜராகிவிடுகின்றனர். வாசுகி சரியாக 8 மணிக்குப் பிரசார ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரின் சிறிய உரையுடன் பிரசாரம் தொடங்குகிறது. அதன் பிறகு, மக்கள் நெருக்கம் மிக்க வட சென்னை குடியிருப்புகள், மார்க்கெட் பகுதிகள், சாலைகளின் சந்திப்புகள், குறுகலான சந்துகள் என்று புகுந்து புறப்பட்டுச் செல்கிறார் வாசுகி. முக்கிய சாலைகளுக்கு வரும்போது மட்டும் ஜீப்பில் ஏறிக்கொள்கிறார். மற்ற நேரங்களில் 'நடராஜா சர்வீஸ்’தான்.

வட சென்னை அருந்ததியர் குடியிருப்புக்குள் சென்ற வாசுகி, ''உங்கள் பிரச்னைகளுக்காக எந்தக் கட்சி எப்போதும் போராடுகிறது? கம்யூனிஸ்ட்களைத் தவிர வேறு யாராவது உங்களை வந்து பார்க்கிறார்களா? உங்களால்தான் அவர்களைப் போய் பார்க்க முடிகிறதா?'' என்று தோழமை நெருக்கத்தை விளக்கி, அவர்களிடம் தனக்கான ஆதரவைக் கேட்கிறார்.

பெரம்பூர் அருந்ததியர் குடியிருப்பில் வாசுகியைச் சந்தித்த மக்கள், ''இங்க இருக்கும் குப்பை மேட்டால் இந்தப் பகுதியே ரொம்ப துர்நாற்றமா இருந்தது. உங்க கட்சி எம்.எல்.ஏ. சௌந்தரராஜன் எங்களோடு போராடி அத இப்ப கொஞ்சம் அந்தாண்ட தள்ளி வெச்சுருக்கார். ஆனா, நிரந்தரத் தீர்வு வேணும். அப்பத்தான் நாங்க நோய் நொடி இல்லாம வாழ முடியும்'' என்றனர். 'உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன்’ என்று உறுதி அளிக்கிறார்.

ராயபுரம் மீனவர் குடியிருப்புக்குள் வாக்குச் சேகரிக்கச் சென்ற வாசுகியை சூழ்ந்துகொண்ட இளைஞர்கள், ''எங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் பிடிக்கும். இந்த ஏரியாவுல ஒண்ணு ரெண்டு அடிப்படை வசதி ஒழுங்கா இருக்குன்னா அதுக்குக் காரணம் உங்க கட்சிதான். ஆனா, நீங்க கூட்டணி வைக்கிற கட்சிகள எங்களுக்குப் பிடிக்காது. உங்க கட்சி தனியா போட்டியிடுறதால உங்களுக்கே வாக்களிப்போம்'' என்று சொன்னதும், வாசுகியின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது.

இடையிடையே டீ, பழச்சாறு. மதியம் 2.30 மணி வரை பிரசாரம் தொடர்கிறது. அதன் பிறகு மாலை நான்கு மணிக்கு அடுத்தகட்டப் பிரசாரம். அது இரவு 9.45 மணி வரை.

வட சென்னை வாக்காளர்கள் உறுதியாக இருப்பார்களா?

- ஜோ.ஸ்டாலின்

படம்: ஆ.முத்துக்குமார்