Published:Updated:

ஆர்த்திக்கு அடுக்கடுக்காய் சந்தேகம்!

'கருணாநிதி சாருக்கு என்ன ஆச்சு? விஜயகாந்த் ஏன் மாறிப்போயிட்டார்?''

பிரீமியம் ஸ்டோரி

அ.தி.மு.க-வுக்கு அதிரடி பிரசாரம் செய்து வருபவர்களில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். அக்னி வெயிலில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார். பிரசாரத்துக்காக திருச்சி வந்த அவரைச் சந்தித்தோம்.

ஆர்த்திக்கு அடுக்கடுக்காய் சந்தேகம்!

 ''நீங்கள் அ.தி.மு.க-வில் சேர்ந்ததே உங்கள் கணவர் கணேஷ§க்குத் தெரியாது என்று சொல்லப்படுகிறதே...  உண்மையா?''

''ஆமாங்க. நான் கட்சியில் சேர்ந்தது கணேஷ§க்குத் தெரியாது. அப்போது அவர் வெளிநாட்டில் இருந்தார்.  என்னோட அப்பா ரவீந்தரன், எம்.ஜி.ஆரோட தீவிர பக்தர். அவர் 42 வருடமா அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினரா இருக்கார்.அதனால் வீட்டில் நானும் அப்பாவும் அடிக்கடி அரசியல் பேசுவோம். காங்கிரஸும் தி.மு.க-வும் ஊழல் பண்ணிட்டு பொய் பிரசாரம் பண்ணுறாங்க. இவர்களை எதிர்த்து ஒரு தனி மனுஷியா அம்மா, எவ்வளவு கஷ்டப்படுறாங்க.  அம்மா ஒவ்வொரு இடமா போய் ஓட்டு கேட்கவே வேணாம். அவங்க பண்ணினதைப் பார்த்துட்டு மக்களே  ஓட்டு போடணும். அம்மாவின் பக்கத்தில் இருந்து உதவி செய்யணும்னு தோணுச்சு. அதனால் அந்தக் கட்சியில் சேரணும்னு முடிவெடித்துட்டு அதை அவரிடம் சொன்னேன். ஆனால் அவர், 'அய்யோ வேண்டாம், எதுக்கு கட்சியில எல்லாம் சேரணும்?’னு சொன்னார். இருந்தாலும் அ.தி.மு.க-வில் சேர்ந்துட்டேன்''

''இப்போது கணேஷ் பி.ஜே.பி-யில் சேர்ந்திருக்கிறாரே..?''

''அவரது நண்பர்கள் அவரை பல நாட்களாகவே பி.ஜே.பி-யில் சேரச் சொல்லி வற்புறுத்திக்கிட்டு வந்தாங்க. ஆனா, அவர் சேரல. நான் அ.தி.மு.க-வில் சேர்ந்ததும் நீ கட்சியில சேர்ந்துட்ட. அதனால நானும் கட்சியில சேரப்போறேன்னு சொல்லிட்டுத்தான் சேர்ந்தார்.''

''கணேஷ் பி.ஜே.பி-யிலும் நீங்கள் அ.தி.மு.க-விலும் இணைந்த பிறகு உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி போகிறது..?''

''நிறைய பேர் சொல்லுறாங்க. இரண்டு பேரும் வேறு வேறு கட்சியில இருந்தாலும் வீட்டில் அரசியல் பேசமாட்டோம்னு சொல்லுவாங்க.

ஆர்த்திக்கு அடுக்கடுக்காய் சந்தேகம்!

ஆனா, நாங்க இரண்டு பேரும் பேசியே மூன்று நாள் ஆகுது.  காரணம் சண்டை.  கட்சியில சேர்ந்த பிறகு ரெண்டு பேருக்கும் செம சண்டை வரும். உதாரணத்துக்கு மோடிக்குக் கல்யாணம் ஆனதை இத்தனை நாளா மறைச்சிட்டு, மோடி சிங்கிள்னு சொன்னீங்கன்னு  நான் கேட்பேன். நாங்க அதை பெருசாவே எடுத்துக்கலைன்னு கணேஷ் சொல்லுவார். இப்படித்தான் சண்டை வரும். வீட்டில் அம்மாவும் அப்பாவும் பஞ்சாயத்து பண்ணுவாங்க. கட்சியில சேர்ந்ததுல இருந்து கல்யாண வாழ்க்கை கலாட்டாவாகத்தான் இருக்கு.''

ஆர்த்திக்கு அடுக்கடுக்காய் சந்தேகம்!

''விஜயகாந்த்தின் பிரசாரம் விமர்சிக்கப்படுவதைக் குறித்து சக கலைஞரான உங்கள் கருத்து என்ன..?''

''அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'சத்ரியன்', 'உழைத்து வாழ வேண்டும்’ உள்ளிட்ட பல படங்கள்ல அவருக்கு மகளா நடிச்சிருக்கேன். அந்தக் காலகட்டத்திலேயே அவர் ஃபைட்டர்ஸ், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என பலருக்குப் பல உதவிகளை செஞ்சிருக்கார். அதை நேரில் பார்த்திருக்கேன். அவர்தான் நடிகர் சங்கத்தில், நான் உறுப்பினராகச் சேர கையெழுத்துப் போட்டாரு. ஆனா, அவர்கூட இருக்கிறவங்க யாரும் சரியில்லைங்க.

ஏன் விஜயகாந்த் இப்படி மாறிட்டார்னு தெரியல. அடுத்தவர் மீது கோபப்பட்டு ஏன் அடிக்கிறார்னு வருத்தமா இருக்கு. ஒரு தலைவருக்கு இருக்கக்கூடாத விஷயம் கோபம். அம்மா, அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து வெச்சிருந்தாங்க. அதை அவர் பயன்படுத்திக்கல. நடிகர் சங்கக் கடனை எல்லாம் அடைச்சவர் ஏன் இப்படி மாறிட்டாருன்னு கவலையா இருக்கு.''

''காங்கிரஸ் மீது அப்படி என்ன கோபம் உங்களுக்கு.. ?''

''1947-ல் காங்கிரஸ் நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்தது. 2014-ல் காங்கிரஸிடம் இருந்து சுதந்திரம் வாங்கும் நிலை ஏற்பட்டுடுச்சு.  இத்தனை வருஷம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஊழலைத்தான் பண்ணினாங்க. எத்தனை வருடப் போராட்டம் ஈழத்தில் நடந்தது? அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிச்ச ராஜபக்ஷேவுக்கு எதிரா ஐ.நா. பொது விசாரணையில ஓட்டு போடுங்கனு சொன்னப்ப பேசாம இருந்தா என்ன அர்த்தம்? அந்த சோனியா அம்மாவுக்கு கோபம் இருக்கும். ஏன்னா அவங்க வீட்டுக்காரர் தமிழ்நாட்டுலதான் இறந்தாருன்னு தமிழ் மக்கள் மேல கோபம் இருக்கும், சரி. கருணாநிதி சாருக்கு என்னாச்சு? தமிழர்கள் சாகும்போது எதுவுமே பேசாம இருந்தார். அது தப்பில்லையா?''

- சி.ஆனந்தகுமார்

படம்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு