Published:Updated:

பட்டம் போட்டுக்கொண்ட பலே வேட்பாளர்கள்

பட்டம் போட்டுக்கொண்ட பலே வேட்பாளர்கள்

பிரீமியம் ஸ்டோரி

'சூழ்ச்சி செய்... குழி பறி.. நாடகம் ஆடு... ஏமாற்று!’ என்ற அரசியல் அரிச்சுவடியை பின்பற்றி எப்படியாவது பதவியில் அமர்ந்துவிடத் துடிக்கிறார்கள் அரசியல்வாதிகள். படிக்காதப் படிப்பைப் படித்தாகச் சொல்லி கட்சித் தலைமையிடம் சீட் வாங்கிப் போட்டியிடும் சிலரின் வண்டவாளம் இது.

• அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல். அவருடைய பெயருக்குப் பின்னால் பி.காம். என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். வேட்புமனுவில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்துவிட்டு, ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

• விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான எஸ்.ராஜேந்திரன் எம்.ஏ. படித்திருப்பதாக வேட்பாளர்

பட்டம் போட்டுக்கொண்ட பலே வேட்பாளர்கள்

பட்டியலில் சொல்லியிருந்தார். ஆனால், பச்சையப்பன் கல்லூரியில் 1988-ம் ஆண்டு எம்.ஏ. தத்துவயியல் தேர்ச்சி பெறவில்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார் ராஜேந்திரன்.

• நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம் பி.ஏ. டி.கோ-ஆப் படித்திருப்பதாக வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா. வேட்புமனுவில் 2014-ல் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. இறுதி ஆண்டு படிப்பதாகவும் சொல்லியிருக்கிறார் சுந்தரம்.

• மயிலாடுதுறை அ.தி.மு.க. வேட்பாளர் பாரதிமோகன் பெயருக்குப் பின்னால் வேட்பாளர் பட்டியலில் TTC Agri.  வேட்புமனுவிலோ '1994 மார்ச் மாதம் தனித் தேர்வராக ப்ளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சிப் பெறவில்லை’ என குறிப்பிட்டுவிட்டு, 1992-ல் விவசாய தொழில்நுட்பக் கழகம் நடத்திய தேர்வில் முதுநிலை பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்.

• சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் பி.எஸ்ஸி., பி.எல். படித்திருப்பதாக சொல்கிறது வேட்பாளர் பட்டியல். வேட்புமனுவிலோ பி.எல். படிப்பைக் குறிப்பிடவில்லை. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்ததாக சொல்லியிருக்கிறார்.

• அ.தி.மு.க-வின் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அன்வர் ராஜா பி.எஸ்ஸி., எம்.ஏ. படித்ததாகச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா. அவரோ சிவகங்கை ராஜா துரைசிங்கம் தேசிங் மெமோரியல் கல்லூரியில் 1970-73ல் பி.எஸ்ஸி. படித்ததாக சொல்லியிருக்கிறார். எம்.ஏ. என்னாச்சு?

• கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கம் பி.ஏ. டிகிரி வாங்கியவர் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவர் பி.ஏ. டிகிரி வாங்கவில்லை. வேட்புமனுவில் மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. கோர்ஸ் முடித்திருப்பதாகச் சொல்லி பி.ஏ. மேல் ஒரு கோடு போட்டிருக்கிறார்.

• தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.ஏ., பி.எல். படித்ததாக சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவர் வேட்புமனுவில் எம்.ஏ., எல்.எல்.பி. என குறிப்பிட்டுள்ளார்.

• ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், எம்.ஏ. படித்ததாகச் சொல்லியிருந்தார் கருணாநிதி. அவரோ வழுதாவூர் என்ற ஊரில் அரசு உயர்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்ததாக வேட்புமனுவில் சொல்லியிருக்கிறார்.

• சேலத்தில் போட்டியிடும் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் பி.ஏ. பட்டதாரி என வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனுவிலும் அதை தெரிவித்திருந்தார். வடபுதுப்பேட்டை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பை 1984-ல் படித்ததாகச் சொல்லியிருக்கும் சுதீஷ், அதன் பிறகு ப்ளஸ் டூ படிப்பை எங்கே படித்தார் என்ற விவரத்தைச் சொல்லாமல் பச்சையப்பன் கல்லூரியில் 2004-ம் ஆண்டு பி.ஏ. முடித்ததாகச் சொல்லியிருக்கிறார்.

• திண்டுக்கல் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி பி.ஏ, பி.எல். பட்டதாரி என குறிப்பிட்டிருந்தார் விஜயகாந்த். ஆனால் வேட்புமனுவிலோ பி.ஏ., எல்.எல்.பி. என குறிப்பிட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

• காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் மல்லை சத்யா, எம்.ஏ. படித்தவர் எனக் குறிப்பிட்டிருந்தார் வைகோ. ஆனால் சத்யாவோ வேட்புமனுவில் பி.ஏ-வை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்.

யாரை ஏமாற்ற இந்த வேலைகள்? மக்களையா... தலைமையையா?

- தமிழ்ச்செழியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு