Published:Updated:

இன்று துணை ஜனாதிபதி தேர்தல்!

விகடன் விமர்சனக்குழு
இன்று துணை ஜனாதிபதி தேர்தல்!
இன்று துணை ஜனாதிபதி தேர்தல்!
இன்று துணை ஜனாதிபதி தேர்தல்!

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று

இன்று துணை ஜனாதிபதி தேர்தல்!

நடைபெறவிருக்கும் நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான ஹமீத் அன்சாரி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று 14 வது குடியரசு துணைத் தலைவராவது உறுதியாகியுள்ளது.

இவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுகிறார்.

ஹமீத் அன்சாரிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள், கூட்டணியை சாராத சில கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். இவர்களில் 500 பேரின் வாக்குகள் அன்சாரிக்கு ஆதரவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மக்களவையில் 204 உறுப்பினர்களும்; மாநிலங்களவையில் 71 பேரும் உள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 19 பேரும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். திமுகவுக்கு மக்களவையில் 18 பேரும் மாநிலங்களவையில் 7 பேரும் உள்ளனர்.

அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். பகுஜன் சமாஜ கட்சிக்கு மக்களவையில் 21 பேரும் மாநிலங்களவையில் 15 பேரும் உள்ளனர்.

ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜகவின் மக்களவை உறுப்பினர்கள் 114 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 49 ஆகும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு மக்களவையில் 20 பேரும் மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர்.சிவசேனாவுக்கு மக்களவையில் 11 பேரும் மாநிலங்களவையில் 4 பேரும் உள்ளனர்.

##~~##
நாடாளுமன்றத்தில் மொத்தம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுக தனது ஆதரவை ஜஸ்வந்த் சிங்குக்கு வழங்குவதாக நேற்று அறிவித்தது.அதேப்போன்று மதிமுகவும் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. 
நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.