Published:Updated:

உ.பி தேர்தல்: `அயோத்தியை தொடர்ந்து மதுரா...!' - கள அரசியல் நிலவரம் என்ன?

மதுரா

உ.பி-யில் முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் மதுராவின் கள நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மதுரா நகரத்துக்கு நேரடி விசிட் அடித்தோம்... இனி உத்தரப்பிரதேசம், மதுராவிலிருந்து நாங்கள், நச்சினார்க்கினியன், பியர்சன்..!

உ.பி தேர்தல்: `அயோத்தியை தொடர்ந்து மதுரா...!' - கள அரசியல் நிலவரம் என்ன?

உ.பி-யில் முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் மதுராவின் கள நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மதுரா நகரத்துக்கு நேரடி விசிட் அடித்தோம்... இனி உத்தரப்பிரதேசம், மதுராவிலிருந்து நாங்கள், நச்சினார்க்கினியன், பியர்சன்..!

Published:Updated:
மதுரா

மதுராவுல வந்து காலைல இறங்குன உடனே நல்ல சாப்பாடு கடைய தேடுனோம். அங்க நாங்க கண்ணில் கண்டதெல்லாம் கிருஷ்ணர் படமும், கச்சோரியும், பால்'ல செஞ்ச பேடாவும் தான். எங்கள 'ராதே ராதே'னு' சிரிச்ச முகத்தோட வரவேற்றாங்க ஒரு சிலர்.

பியர்சன்: என்ன ப்ரோ ஒரே கச்சோரி கடையா இருக்கு? ஒரு ரொட்டி கடை, அண்டா பூஜியா(முட்டை பொரியல்) கடயக் கூட காணோம்?

ந.இனியன்: மதுராவுல பலரோட காலை உணவு எண்ணெயில பொரிச்சு எடுத்த கச்சோரியும், சூடான பெரிய ஜிலேபிகளும் தானாம். அப்புறம் உனக்கு ஒரு ஸேட் நியூஸ். மதுரா நகரத்துல நான் வெஜ் உணவுக்குத் தடை போட்டிருக்காரு யோகி ஜி.

மதுரா
மதுரா

பியர்சன்: ஓஹ்... அப்படியா கதை! சரி வாங்க பேடா ஸ்சூவிட் சாப்புடுவோம்.

கிருஷ்ணர், சுண்டி வரப் பால்ல சக்கரைய தெரியாம போட்டப்ப கிடைச்சது தான் பேடானு கடைக்கார பையா ஒருத்தரு விளக்கம் கொடுக்க, அத கேட்டுட்டு அங்கிருந்து வேலையப் பார்க்க கிளம்பினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரா ஒரு வளர்ந்த நகரம்'னு சீனப்பயணி யுவான்ஸ்வாங் 1,500 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்தார். யமுனை நதிக்கரை, இந்துக்கள் கொண்டாடும் கிருஷ்ண ஜென்மபூமி, ஈத்கா மசூதி எனப் பல சிறப்புகளை கொண்டதுதான் மதுரா.

சரி வாங்க மதுரா தேர்தல் கள நிலவரத்தை அலச ஆரம்பிப்போம்!

மதுரா
மதுரா

5 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மதுரா மாவட்டத்தின் தலைநகரான மதுரா தொகுதியைப் பற்றி பார்ப்போம். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சரும், மதுராவின் எம்.எல்.ஏ-வுமான ஸ்ரீகாந்த் சர்மா மீண்டும் இங்கே வேட்பாளராக போட்டியிடுகிறார்.

காங்கிரஸைப் பொறுத்தவரை நான்கு முறை எம்.எல்.ஏ-வான பிரதீப் மாத்தூர் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய லோக் தள கூட்டணி சார்பாக சதாபாத்தின் முன்னாள் எம்.எல்.ஏ தேவந்திர அகர்வால் போட்டியிடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பா.ஜ.க எம்.எல்.ஏ-வை தொகுதி பக்கமே காணவில்லை' என்ற காங்கிரஸின் பிரசாரமும், `சமாஜ்வாடி எம்.எல்.ஏ வேற மாவட்டத்து ஆளு' என்ற பார்வையும்தான் இங்கு பிரதான கட்சிகளின் பிரசாரமா முழக்கமா இருக்கு.

மதுரா மாவட்டத்தின் பிரச்னைகள் என்னென்ன:-

``தேசியகீதம் வரைக்கும் இடம்பெற்ற புகழ்பெற்ற யமுனை நதிக்கரை கழிவுப்பொருள்களால் பாழ்பட்டிருப்பது இந்தப் பகுதியின் மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது.

அதேபோல, உருளைக்கிழங்கு அதிகம் விளையக் கூடிய இந்தப் பகுதியில் அரசாங்கம் சார்பாக உருளைக்கிழங்கை பதப்படுத்துவதற்கான கிடங்குகள் எதுவும் இதுவரையிலும் அமைக்கப்படவில்லை.

மதுரா
மதுரா

சத்தா சர்க்கரை ஆலையும் மூடப்பட்டு விட்டதால், ஹரியானா வரைக்கும் விவசாயிகள் தங்கள் விளைப்பொருள்களை கொண்டுபோக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு" எனப் பல மதுராவின் பிரச்னைகளை நமக்கு கவனப்படுத்தினார் தொழிற்சங்க செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சிவ் டட் சதுர்வேதி.

மதுரா
மதுரா

``யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுராவைப் பொறுத்தவரை ரொம்ப அடிப்படை பிரச்னைகளான கல்வி, மருத்துவம் போன்ற பிரச்னைகள் எதுவுமே இன்னும் தீர்க்கப்படவில்லை. வளர்ச்சிக்கான ஏக்கத்தை எளிய மக்களின் கண்களில் பார்க்க முடிகிறது" என்றார் சமூக செயல்பாட்டாளர் சௌவுரப் இன்ஸான்.

மதுரா மக்கள் மனசு!

மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துகொள்வதற்கு, `உங்களோட ஒட்டு யாருக்கு?' என்ற கேள்வியை அவர்களிடம் முன்வைத்தோம்.

ஹோலி கேட் பகுதியில் லாண்டரி கடை வைத்திருக்கும் சுஷ்மா ஷர்மா பேசுகையில், ``ஒரு பெண்ணா தனியா வாழ்கைய நடத்திவர்றேன். பல நெருக்கடிகளைச் சந்திக்கிறேன். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்ன கடுமையாக பாதிக்குது. காஸ் சிலிண்டர் விலை ஆயிர ரூபாய்க்கு மேல ஏறிடுச்சு."

``நெய், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டப் பொருள்களின் விலை அதிகமா இருக்கு. கோதுமை, பால் மட்டும் வச்சு வாழ முடியாதுல? ஆனாலும், பா.ஜ.க-வுக்குத் தான் என் ஓட்டு அப்ப தான் இந்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்" என்றார் சுஷ்மா ஷர்மா
சுஷ்மா ஷர்மா - பங்கஜ் சத்தூர்வேதியோ - பிருந்தா ராணி
சுஷ்மா ஷர்மா - பங்கஜ் சத்தூர்வேதியோ - பிருந்தா ராணி

விஷ்ராம் கட் பகுதியில் பூஜைக்கான பொருள்கள் விற்கும் கடை வைத்திருக்கும் பங்கஜ் சத்தூர்வேதியோ பேசுகையில், ``யமுனை நதியை நாங்கள் தெய்வமாக வணங்குறோம். ஆனா, கடந்த அஞ்சு வருஷத்துல அசுத்தமா இருக்க யமுனைய சுத்தம் செய்ய பா.ஜ.க எந்த முயற்சியும் எடுக்கல. அதுக்கு ஒதுக்குன நிதி எங்க போச்சுனு யாருக்கும் தெரியாது. சுத்தம் செஞ்ஜா அவங்களால அரசியல் செய்ய முடியாதுல? மின்சாரத்துறை அமைச்சரின் தொகுதியில எங்களால மின் கட்டணம் கூட கட்ட முடியாத நிலைதான் எங்க நிலை. மேலும், அப்பாவி மக்கள் மேல பொய் வழக்கு போட்டதுதான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ மக்களுக்கு செஞ்ச நல்ல காரியம். அதுனால என் ஓட்டு காங்கிரஸுக்கு தான்" என்றார்.

``என் கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்னாடியே இறந்துட்டார். உடம்பு முடியாத ஒரு மகன வச்சிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். எனக்கு வருமானம் பெருசா எதுவுமே இல்ல. வீடு வாடகை கொடுக்க ரொம்ப சிரமமா இருக்கு. நரேந்திர மோடிக்கு தான் என்னோட ஆதரவு. அரசு சார்பா எங்களுக்கு வீடு கொடுத்தா பெரும் உதவியா இருக்கும். என்னோட பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்" என்றார் பேடா ஸ்வீட் கடையில் வேலை பார்க்கும் பிருந்தா ராணி.

மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி அரசியல்

தொடக்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தே மதுரா தொகுதிக்கு தனி கவனம் செலுத்தியதால், அவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுவுக்கு அரசியில் ரீதியாக பாரதிய ஜனதா கட்சிக்கு முக்கியமான ஒரு தொகுதி மதுரா.

அடிப்படை பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும், மதுராவை பொறுத்தவரை இங்கிருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் அதே வளாகத்தில் இருக்கும் ஈத்கா மசூதி விவகாரம்தான் தலையாய பிரச்னையாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது.
கோபேஸ்வர்நாத் சதுர்வேதி
கோபேஸ்வர்நாத் சதுர்வேதி
இதுகுறித்து கிருஷ்ண ஜென்மபூமி டிரஸ்ட்டைச் சேர்ந்த கோபேஸ்வர்நாத் சதுர்வேதி கூறுகையில், ``அயோத்தியை விட்டு கிளம்பியது போல மதுரா மற்றும் காசியை விட்டும் அவர்கள் கிளம்பவேண்டும். இந்துக்களின் புனித இடமான இதை நிச்சயம் நாங்கள் மீட்போம்" என்றுத் தெரிவித்தார்.
பேராசிரியர் ஹசன்
பேராசிரியர் ஹசன்

இதுகா கமிட்டி சார்பாக பேராசிரியர் ஹசன் நம்மிடம் பேசியபோது, ``இந்தியாவிலேயே அற்புதமான புத்தர் சிலைகள் மதுராவுல தான் அதிகம் கிடைச்சிருக்கு. அவர்கள் கூட இது எங்களுடைய இடம்'னு உரிமை கோரலாம். நாம இப்போ ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கோம். ஜனநாயக முறைப்படி உரையாடுவதுதான் தீர்வாக இருக்க முடியும்" என்றார்.

தொடர்ந்து அலசுவோம் உத்தரப்பிரதேசத்தை...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism