Published:Updated:

Exit Polls: பஞ்சாப்பில் முந்தும் ஆம் ஆத்மி; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Exit Polls பஞ்சாப் கருத்துக்கணிப்பு

பஞ்சாப்பில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் சொல்வதென்ன?!

Exit Polls: பஞ்சாப்பில் முந்தும் ஆம் ஆத்மி; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பஞ்சாப்பில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் சொல்வதென்ன?!

Published:Updated:
Exit Polls பஞ்சாப் கருத்துக்கணிப்பு

பஞ்சாப் தேர்தல்:

பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 23-ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்திருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது முடிந்துள்ள தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவிவருகிறது.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துக் களம் காண்கிறது. இந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கிறது. சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தலைச் சந்திக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தனித்துத் தேர்தலைச் சந்திக்கிறது. அதேபோல இடதுசாரிகளும் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருத்துக்கணிப்பு முடிவுகள்:

இன்று ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த முடிவுகள் பின்வருமாறு...

Republic
Republic

ரிபப்ளிக் எக்ஸிட் போல்ஸ்:-

*ஆம் ஆத்மி - 62 முதல் 70 இடங்கள்

* காங்கிரஸ் - 23 முதல் 31 இடங்கள்

* சிரோமணி அகாலிதளம் - 16 முதல் 24 இடங்கள்

* பா.ஜ.க - 1 முதல் 3 இடங்கள்

India Today
India Today

இந்தியா டுடே:-

* ஆம் ஆத்மி - 76 முதல் 90 இடங்கள்

* காங்கிரஸ் - 19 முதல் 31 இடங்கள்

* சிரோமணி அகாலிதளம் - 7 முதல் 11 இடங்கள்

* பா.ஜ.க - 1 முதல் 4 இடங்கள்

* மற்றவை - 0 முதல் 2 இடங்கள்

exit polls
exit polls
NDTV

என்.டி.டி.வி எக்ஸிட் போல்ஸ்:-

* ஆம் ஆத்மி - 68 இடங்கள்

* காங்கிரஸ் - 27 இடங்கள்

* சிரோமணி அகாலிதளம் - 17 இடங்கள்

* பா.ஜ.க - 3 இடங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Punjab Exit Poll
Punjab Exit Poll
India Today

டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்ஸ்:-

* ஆம் ஆத்மி - 70 இடங்கள்

* காங்கிரஸ் - 22 இடங்கள்

* சிரோமணி அகாலிதளம் - 19 இடங்கள்

* பா.ஜ.க - 5 இடங்கள்

நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்ஸ்:-

* ஆம் ஆத்மி - 56 முதல் 61 இடங்கள்

* காங்கிரஸ் - 24 முதல் 29 இடங்கள்

* சிரோமணி அகாலிதளம் - 22 முதல் 26 இடங்கள்

* பா.ஜ.க - 1 முதல் 6 இடங்கள்

ஏ.பி.பி எக்ஸிட் போல்ஸ்:-

* ஆம் ஆத்மி - 51 முதல் 61 இடங்கள்

* காங்கிரஸ் - 22 முதல் 28 இடங்கள்

* சிரோமணி அகாலிதளம் - 20 முதல் 26 இடங்கள்

* பா.ஜ.க - 7 முதல் 13 இடங்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism