Published:Updated:

``எங்களுக்கு தைரியம் இருக்கிறது... அதனால்தான் தனித்துப் போட்டியிடுகிறோம்!" - நடிகை குஷ்பு பேட்டி

குஷ்பு

சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்களித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க நிர்வாகி நடிகை குஷ்பு, ``எங்களுக்கு தைரியம் இருக்கிறது தனித்துப் போட்டியிடுகிறோம்" என்று கூறினார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதலே தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாட்டின் குடிமக்களாகிய பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரபலங்கள் என அனைவரும் ஜனநாயகக் கடமையாற்றிவருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க நிர்வாகி நடிகை குஷ்பு சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ``நீங்க வெளியே வந்து யார் ஜெயிக்கணும், உங்களுக்கு யார் நல்லது பண்ணுவாங்கனு யோசிச்சு ஓட்டுப் போடும்போதுதான் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால் வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்தால் எங்களால் நிச்சயமாக அது முடியாது. எங்களுக்கு தைரியம் இருக்கிறது. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம். வெற்றி வாய்ப்பு பற்றிப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பைப் பற்றி இந்த நேரத்தில் பேச முடியாது" என்றார்.

குஷ்பூ
குஷ்பூ
twitter

பேட்டியின்போது பத்திரிகையாளர் ஒருவர், ``எப்போதும் நோட்டாவோடுதான் பா.ஜ.க-வை ஒப்பிட்டுப் பேசுவார்கள், இந்தத் தேர்தலில் நோட்டா இல்லை... அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என குஷ்புவிடம் கேள்வி எழுப்பினார். பத்திரிகையாளரின் இந்தக் கேள்விக்கு, ``அப்படித்தான் சொல்லிச் சொல்லி இன்று நாலு பேர் சட்டசபைக்குப் போயிட்டாங்க" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism