Published:Updated:

`நல்ல முடிவா எடு!' - நாம் தமிழர் பெண் வேட்பாளரை மிரட்டினாரா திருப்புல்லாணி அ.தி.மு.க ஒ.செ?

`உனக்குன்னு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோமா. நீ மத்தவங்ககிட்ட யோசனை கேட்காதே. அவுங்க உன்னை குழப்பி விட்டுருவாங்க'.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் தன் மனைவிக்கு எதிராகப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வாபஸ் பெற வலியுறுத்தும் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரின் மிரட்டல் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்புல்லாணி  ஒன்றியம்
திருப்புல்லாணி ஒன்றியம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் கருப்பையா. இவரின் மனைவி கமலா திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சுபாஷினி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

தன் மனைவி கமலா, தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் ஒன்றியப் பெருந்தலைவராக பொறுப்பேற்க வைத்துவிடலாம் என்ற திட்டத்துடன் கருப்பையா காய் நகர்த்தி வருகிறார். இதற்கு இடையூறாக உள்ள எதிர்க்கட்சி வேட்பாளர்களை சரிகட்டும் வேலையிலும் அவர் இறங்கியுள்ளார். இதற்காக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சுபாஷினியை போட்டியில் இருந்து விலகச் சொல்லி செல்போன் மூலம் பேசியுள்ளார்.

அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கருப்பையா
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கருப்பையா

அதில், `தேர்தல் எப்படி நடந்தாலும் ஜெயிக்கப்போவது அ.தி.மு.க ஆளுக மட்டும்தான். நாளைக்கு ஒன்றிய சேர்மன் பதவியும் அ.தி.மு.க-வுக்குதான் கிடைக்கப் போகுது. எனவே, சொந்தக்கார பொண்ணான நீ கேட்டா எதுவும் செய்து தராமலா இருக்கப் போறோம். நாம் தமிழர் கட்சி எல்லா கவுன்சிலருக்கும் போட்டியிடல. ஒரு சில பேரு கட்சியில இருக்குறோம்கிறதாலயோ காசு வாங்குறதுக்காக நிக்கிறாங்களோன்னு தெரியல. அ.தி.மு.க ஆட்சி நடக்குது. நான்தான் ஒன்றியச் செயலாளர். நீ நினைக்கிற கோரிக்கையை செஞ்சு தர மாட்டோமா. உனக்குன்னு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோமா. நீ மத்தவங்ககிட்ட யோசனை கேட்காதே. அவுங்க உன்னைக் குழப்பி விட்டுருவாங்க.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் அதிகாரம், அரசின் துணைச் செயலாளருக்கு போனது ஏன்?

ஏதாவது ஒரு பிரச்னைன்னா யாருகிட்ட போய் நிப்ப. உன்னைய மிரட்டுறேன்னு நினைக்க வேணாம். எனக்கு உன்னைய கட்டாயப்படுத்தி வாபஸ் வைக்க நினைக்கல. சில இடங்களில நின்னவங்க எல்லாம் வாபஸ் வாங்கிட்டாங்க. அவங்க எல்லாம் அவங்க சொந்தங்களுக்காக வாபஸ் வாங்கிட்டாங்க. நீயும் நம்ம சொந்தக்காரப் புள்ளை. தூக்கி வளர்த்த பிள்ளை. நல்ல முடிவா சீக்கிரம் எடு' என மிரட்டும் தொனியிலும் கெஞ்சிக் கேட்கும் தொனியிலும் பேசுகிறார்.

நாம் தமிழர் வேட்பாளர் சுபாஷினி
நாம் தமிழர் வேட்பாளர் சுபாஷினி

ஒன்றியச் செயலாளர் கருப்பையாவிடம் பேசும் நாம் தமிழர் வேட்பாளர் சுபாஷினி, தன் கணவனிடம் ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக அப்போதைக்கு கூறினாலும் போட்டியிலிருந்து விலகவில்லை. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வாபஸ் வாங்கச் சொல்லி ஒன்றியச் செயலாளர் கருப்பையா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

`ஏலம் இல்லை; மிரட்டல் இல்லை!' - உள்ளாட்சி நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வுசெய்த தஞ்சை கிராமம்

இதுகுறித்து அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கருப்பையாவிடம் கேட்டபோது, ``தேர்தலில் போட்டியிடும் அந்தப் பெண் எனது அண்ணன் மகள். அதனால்தான் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளும்படி பேசினேன். அதுவும் அன்பாகத்தான் கேட்டேனே தவிர, மிரட்டும் தொனியில் பேசவில்லை" என்றார்.