Published:Updated:

வேட்பாளர் மாயம்; திமுக-வினர் மீது அதிமுக-வினர் போலீஸில் புகார்! - என்ன நடக்கிறது வேலூரில்?

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்

``ஆளுங்கட்சியினரின் அராஜகம் தொடர்கிறது. மாயமான 11-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்’’ என்று அந்தக் கட்சியின் வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் புகார் மனு அளித்திருக்கிறார்.

வேட்பாளர் மாயம்; திமுக-வினர் மீது அதிமுக-வினர் போலீஸில் புகார்! - என்ன நடக்கிறது வேலூரில்?

``ஆளுங்கட்சியினரின் அராஜகம் தொடர்கிறது. மாயமான 11-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்’’ என்று அந்தக் கட்சியின் வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் புகார் மனு அளித்திருக்கிறார்.

Published:Updated:
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்

ன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதற்குள்ளாகவே, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பலர் வெளியில் தலைக்காட்டவில்லை. தி.மு.க நிர்வாகிகளின் மிரட்டலால் சில வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் தலைமறைவாகிவிட்டதாகவும், கடத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி, வேலூர் மாநகரை பரபரக்க வைத்திருக்கின்றன. இந்த விவகாரத்தின் பின்னணியை அலசினோம்.

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பெயரில் சமூக வலைதளங்களில் நேற்று மாலை ஒரு பதிவு வைரலானது. அதில், ``தி.மு.க-வினரால் பல அ.தி.மு.க வேட்பாளர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இதனால், அவர்கள் தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில், தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டனர். கட்சித் தொண்டர்கள்கூட அணுக முடியாத நிலைக்குத் தலைமறைவாகிவிட்டனர். குறிப்பாக, `காட்பாடி முதலாவது மண்டலத்திலிருக்கும் 15 வார்டுகளிலும் வெற்றிபெற வேண்டும்’ என்று அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படியே, அ.தி.மு.க வேட்பாளர்கள் மிரட்டலுக்கு ஆளாகினர். ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் தி.மு.க-வின் இப்படிப்பட்ட செயலுக்கு பயப்பட மாட்டோம்’’ என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

``ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து எந்தெந்த வேட்பாளருக்கு அச்சுறுத்தல் வந்தது?’’ என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்.

``வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. இவை, நிர்வாகரீதியாக நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மண்டலமும் 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி, மாநகராட்சியின் 60 வார்டுகளும் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குள்தான் வருகின்றன. வேலூரில் 36 வார்டுகள், காட்பாடியில் 17 வார்டுகள், அணைக்கட்டில் 6 வார்டுகள், ஆற்காட்டில் 1 வார்டும் வருகிறது. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

60 வார்டுகளையும் மொத்தமாக சுருட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சதி செய்கிறார்கள். ஒன்றாவது மண்டலக் குழுவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார் துரைமுருகன். அந்த மண்டலக் குழுவின் தலைவரையும் அவரே தேர்வு செய்வாராம். அதேபோல, நான்காவது மண்டலக் குழுத் தலைவரை தி.மு.க மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் தேர்ந்தெடுப்பாராம். 36 வார்டுகளை உள்ளடக்கிய வேலூர் சட்டமன்றத் தொகுதியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டலக் குழுவின் தலைவர்களை முன்னாள் மேயரும் இந்நாள் எம்.எல்.ஏ-வுமான கார்த்திகேயன் தேர்வு செய்வாராம்.

அமைச்சர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர் நந்தகுமார், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மூவரின் மிரட்டல் காரணமாக அ.தி.மு.க வேட்பாளர்கள் களத்துக்கு வந்து வாக்குச் சேகரிக்க முடியவில்லை.

காணாமல் போனதாகக் கூறப்படும் அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரன்
காணாமல் போனதாகக் கூறப்படும் அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரன்

வாக்குப்பதிவு நடப்பதற்குள்ளாகவே 7, 8 ஆகிய இரண்டு வார்டுகளையும் போட்டியின்றி தி.மு.க வேட்பாளர்கள் கைப்பற்றிவிட்டனர். 7-வது வார்டில் புஷ்பலதா வன்னியராஜா, 8-வது வார்டில் சுனில்குமார் ஆகியோர்தான் வெற்றிபெற்ற வேட்பாளர்கள். இந்த இரு வார்டுகளுமே துரைமுருகனின் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள்தான் இருக்கின்றன. 7-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் இருவரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அந்த வார்டில் மீதமிருந்த பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்துவிட்டனர். இதன் பின்னணியில் ஆளுங்கட்சி தலையீடும், மிரட்டலும் இருந்தது.

அதேபோல, 8-வது வார்டிலும் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க வேட்பாளர்களின் மனுக்கள் எந்தவித காரணமும் சொல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டு, தி.மு.க வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், 11-வது வார்டிலும் ஆளுங்கட்சி மிரட்டல் காரணமாக அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரன் காணாமல் போயிருக்கிறார். அவர் கடத்தப்பட்டாரா அல்லது அச்சுறுத்தல் காரணமாக வெளியூர் சென்று பதுங்கிக் கொண்டாரா? என்பது தெரியவில்லை. நேற்று முன் தினம் அதிகாலை 3 மணி வரை குடும்பத்துடன் அவர் வீட்டில் இருந்திருக்கிறார். அதன்பின்பு அவரைக் காணவில்லை. அவரது செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன. அவர் காணாமல் போவதற்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி குண்டர்களால் மிரட்டப்பட்டிருக்கிறார். இதனை தனது சகோதரர் மற்றும் நண்பரிடமும் சுகேந்திரன் கூறியிருக்கிறார்.

புகார் மனு அளித்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்
புகார் மனு அளித்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்

சுகேந்திரனை எதிர்த்து, தி.மு.க-வில் போட்டியிடும் வேட்பாளர் ரஜினி, அமைச்சர் துரைமுருகனின் உறவினர். ரஜினியின் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதால்தான் அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரனை மிரட்டியிருக்கிறார்கள். அவரைக் கண்டுப்பிடித்துத் தரவேண்டும். வேட்பாளரை மிரட்டும் ஆளுங்கட்சி புள்ளிகள், குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். காணாமல் போனதாகக் கூறப்படும் அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரனின் செல் நம்பருக்கு நாமும் தொடர்பு கொண்டோம். போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் விசாரித்தபோது, அவரின் வீடும் பூட்டப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே, அ.தி.மு.க வேட்பாளரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அந்தக் கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு சுற்றுலா மாளிகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனைச் சந்தித்து புகார் மனு அளித்தார். அதையடுத்து அவர், வேலூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

அந்த மனுவில், ``11-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் சுகேந்திரன் பிரசாரம் செய்து வந்த நிலையில், நேற்று முதல் அவரைக் காணவில்லை. தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தூண்டுதலின் பேரில் எங்கள் வேட்பாளருக்கு தி.மு.க-வினர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். சுகேந்திரனின் சகோதரர் மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருக்கிறார். அவர் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை செய்கிறார். அவரின் பணியை முடக்கி விடுவதாகவும், ஒப்பந்தப் பணிகளுக்கு பணம் பெற முடியாது என்றும் மிரட்டியிருக்கிறார்கள். இதேபோல, மற்ற வார்டுகளிலும் எங்கள் வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். காணாமல்போன வேட்பாளர் சுகேந்திரனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும். தொடர்ந்து, எங்கள் வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தி.மு.க-வினர் மீதான தொடர் சர்ச்சைகளால், வேலூர் மாநகரத் தேர்தல் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.