Published:Updated:

கொரோனா பரவலுக்கு மத்தியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; யாருக்குச் சாதகம்... யாருக்குப் பாதகம்?!

மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழல் யாருக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் அமையும்..?

கொரோனா பரவலுக்கு மத்தியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; யாருக்குச் சாதகம்... யாருக்குப் பாதகம்?!

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழல் யாருக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் அமையும்..?

Published:Updated:
மாநிலத் தேர்தல் ஆணையம்

கொரோனா பரவல்:

கொரோனா இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க மாட்டோம். கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், தற்போது, உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 6,000 என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது. இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது மூன்று லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

தமிழகத்தைப் பொறுத்தவரை, தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட 600 என்ற எண்ணிக்கையிலிருந்து, தற்போது 28,000-க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. சென்னையில் 8,500 வரை சென்ற தொற்றின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக படிப்படியாகக் குறைந்துவருகிறது. ஆனால், தமிழகம் முழுவதிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தவண்ணமாகவே காணப்படுகிறது. மேலும், தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக மருத்துவத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:

சமீபத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. மாநிலத் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கான பணிகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது. கொரோனா பரவலால் இந்தத் தேர்தல் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆலோசனைக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம், மேயர் பதவி இட ஒதுக்கீடு என்று பரபரப்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளைச் செய்துவருகிறது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதக் கடைசியில் குறையும் என்று வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பான ஆலோசனையிலிருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையம், இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்றும், இந்தத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்:

கொரோனா பரவல் காரணமாகத் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும், பல கட்சிகள் தேர்தலுக்கு விருப்ப மனுக்களைப் பெறும் வேலைகளை ஏற்கெனவே செய்து முடித்துவிட்டன. மக்கள் நீதி மய்யம் ஒருபடி மேலே சென்று வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், விருப்ப மனு பெற்ற கட்சிகளும், தங்களின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றன.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலிலும் அதைவிட அதிகமான இடங்களைக் கைப்பற்ற, தீவிர தேர்தல் பணியில் அந்தக் கட்சி இறங்கியிருக்கிறது. அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த தேர்தலில் இழந்த இடங்களை இந்தத் தேர்தலில் பிடித்தே ஆக வேண்டும் என்று அதற்கான தேர்தல் யுத்திகளைத் தயார் செய்துவருகின்றன. பா.ஜ.க., காங்கிரஸ், வி.சி.க போன்ற கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கான இடங்களைப் பெற இப்போதிருந்தே காய்நகர்த்திவருகின்றன.

சாதக, பாதகம் யாருக்கு?

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பொருள்களின் தரம் கேள்விக்குறியானது, பொங்கல் பரிசுப் பணம் கொடுக்காதது, மாதா மாதம் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் இன்னும் கொடுக்காதது போன்ற பல்வேறு விஷயங்களை பிரதானப்படுத்தி, தேர்தல் பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டிவருகின்றன. இது போன்ற சில விஷயங்கள் ஆளும் அரசுக்குப் பாதகமாகவும், எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகவும் அமையும். இந்தமுறை சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக - திமுக
அதிமுக - திமுக
இந்தத் தேர்தலில் அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் கைப்பற்றியே ஆக வேண்டும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெரும்பான்மையான வெற்றியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் எனத் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகிறது ஆளும் தி.மு.க தரப்பு.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராகக் கையிலெடுக்கும் விஷயங்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டார்கள் ஆளுங்கட்சியினர். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் தங்களின் செயல்பாடுகளையும், கொரோனாவைக் கட்டுப்படுத்தியதையும், தற்போது கொரோனா தொற்று அதிகரித்துவந்த சூழலிலும் முழு பொதுமுடக்கம் இல்லாமல் கட்டுப்படுத்திவருவதையும், கூறிய அனைத்து திட்டங்களையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்று கூறி வாக்கு சேகரிக்க பல்வேறு திட்டங்களோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவருகிறது தி.மு.க. ஆளுங்கட்சியாக இருப்பது ஒரு சாதகம் என்றாலும், தேர்தல் சமயத்தில் என்ன நடக்கும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

தேர்தல் வரட்டும்... பொறுத்திருந்து பார்க்கலாம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism