Published:Updated:

அஸ்ஸாம்  சட்டசபைத் தேர்தல் 2021: ஆட்சியைத் தக்க வைக்குமா பாஜக?

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் பாஜகவுக்கு ஒருபுறம் மாநிலத்தில் பரவலான எதிர்ப்பு காணப்பட்ட நிலையில், காங்கிரஸ் அமைத்த மெகா கூட்டணியும் சேர்ந்துகொண்டு, இந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு கடும் நெருக்கடியாகவே அமைந்தது.

அஸ்ஸாம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளின்படி இங்கு பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைக்கு, மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றன. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக
ஆட்சியில் உள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அக்கட்சி மிகவும் முனைப்புடன் தேர்தல் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டது. வழக்கம்போல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவில்
தொடங்கி, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பாஜக பிரச்சாரம்
பாஜக பிரச்சாரம்

அஸ்ஸாம் மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு தொடங்கி 2016 ஆம் ஆண்டு வரை அம்மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்கத் தலைவராக திகழ்ந்த தருண் கோகாய், கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்ததற்கு பின்னர், வேறு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லாமல் காங்கிரஸ் தவிக்கிறது. இந்த நிலையில், அதனை ஈடுகட்டுவதற்காக இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா, பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி,
பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு மெகா கூட்டணியை அமைத்து காங்கிரஸ்.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் பாஜகவுக்கு ஒருபுறம் மாநிலத்தில் பரவலான எதிர்ப்பு காணப்பட்ட நிலையில், காங்கிரஸ் அமைத்த மெகா கூட்டணியும் சேர்ந்துகொண்டு, இந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு கடும் நெருக்கடியாகவே அமைந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தச் சூழலில் அஸ்ஸாம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளின்படி இங்கு பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு