Published:Updated:

2023-ம் ஆண்டில் 10 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்... 2024 மக்களவையில் யாருக்குச் சாதகம்?!

மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்
News
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

நடப்பாண்டில் 10 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இவை 2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிக் களமாகப் பார்க்கப்படுவதால் யாருக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது என்ற கேள்வி எழுகிறது.

2023-ம் ஆண்டில் 10 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்... 2024 மக்களவையில் யாருக்குச் சாதகம்?!

நடப்பாண்டில் 10 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இவை 2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிக் களமாகப் பார்க்கப்படுவதால் யாருக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது என்ற கேள்வி எழுகிறது.

Published:Updated:
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்
News
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

10 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்:

கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் சர்ச்சை, நபிகள் குறித்து பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்து, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்திக்குச் சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், அரசுக்கும் இடையே நடந்துவரும் மோதல்கள், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றது, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, காங்கிரஸின் இமாச்சல் வெற்றி என அரசியல் பரபரப்புக்குக் குறையேதும் இல்லாமல் முடிவடைந்திருக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு கட்சியின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் புதிய பார்வையைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தியிருக்கக்கூடும். இந்த நிலையில்தான் புத்துணர்வோடு பிறந்திருக்கிறது 2023-ம் ஆண்டு. இந்த ஆண்டிலும் இந்திய அரசியல் களத்தில் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதற்கு இந்த ஆண்டில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, மிசோரம், காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருப்பதே காரணம்.

சட்டப்பேரவைத் தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தல்

இந்த 10 மாநிலத் தேர்தல்களும் 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிக் களமாகப் பார்க்கப்படுகின்றன. எனவேதான் இதற்கான எதிர்பார்ப்பு தற்போதே எகிறி இருக்கிறது. இந்தத் தேர்தல்களின் முடிவில் 2014-ம் ஆண்டில் இருந்த பிரதமர் மோடியின் எழுச்சி இன்னும் தொடர்கிறதா அல்லது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் மூலமான எழுச்சி வெற்றிபெற்றிருக்கிறதா என்பது தெரிந்துவிடும்.

இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தேர்தல் தேதிகளைத் தேர்வுசெய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. மேலும், உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, வரும் பிப்ரவரி-மார்ச்சில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

116 மக்களவைத் தொகுதிகள்:

எனவே, மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதி முடிகிறது. இந்த மாநிலம் 224 தொகுதிகளைக்கொண்டது. இங்கு மட்டும் தனியாகத் தேர்தல் நடத்தப்படும். இதேபோல் மிசோரம் மாநிலத்தின் பதவிக்காலம் டிசம்பர் 17-ம் தேதியும், சத்தீஸ்கர், மத்தியப் பிரேதச மாநிலத்தின் பதவிக்காலம் முறையே அடுத்த ஆண்டு ஜனவரி 3, ஜனவரி 6-ம் தேதிகளில் முடிவடைகின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும் ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 14, 16-ம் தேதிகளில் முடிகின்றன. எனவே, இந்த ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து டிசம்பரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒன்பது மாநிலங்களிலும் மொத்தமாக 116 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இது தவிர, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான தேர்தல், ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்:

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு நடக்கவிருக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. முன்னதாக, இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2024-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. முன்னதாக நடக்கும் இந்த 10 மாநிலத் தேர்தல்களும் மக்களவைத் தேர்தல் முடிவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்விதமாக அமைந்திருக்கின்றன. எனவே, இதில் எப்படியாவது வெற்றி வாகை சூட வேண்டும் என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "இந்த பத்து மாநிலச் சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகளும் 2024-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். இதில் வடகிழக்கு மாநிலத் தேர்தல்களை நாம் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தற்போது எப்படி பாஜக அங்கு ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாநிலக் கட்சியையும் கபளீகரம் செய்து ஆட்சிக்கு வந்தார்கள்.

ப்ரியன்
ப்ரியன்

பாஜக - காங்கிரஸுக்கு இருக்கும் சவால்:

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கர்நாடகா தேர்தலைத்தான் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைப் பொறுத்துத்தான் யார் பலம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்த நான்கு மாநிலங்களிலும் 2017-18-ம் ஆண்டில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வந்தது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருக்கும் காங்கிரஸிலிருந்து ஆட்களை இழுத்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது. வரும் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டாலே போதுமானது.

மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிட்டால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்குப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், பொம்மை அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு பலமாக இருக்கிறது. உட்கட்சிப் பிரச்னைகள் இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக-வுக்குள் ஏராளமான உட்கட்சிப் பிரச்னைகள் இருக்கின்றன. இங்கும் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால், அந்தக் கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நல்ல களம் கிடைத்துவிடும்” என்றார்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

காங்கிரஸை நம்ப ஆரம்பிக்கும் மாநிலக் கட்சிகள்:

தொடர்ந்து அவர், "திரிபுராவைப் பொறுத்தவரை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் பலமாக இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் நுழைந்திருந்தாலும், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குப் பலம் பெறவில்லை. தெலங்கானாவில் டிஆர்எஸ்-க்குக் கடுமையான போட்டி காத்துக்கொண்டிருக்கிறது. இங்கு காங்கிரஸும் களத்தில் இருப்பதால், பாஜக-வுக்கு ஒருசில இடங்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தற்போது காங்கிரஸ் கட்சியை மாநில கட்சிகள் ஓரளவுக்கு நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். பாரத் ஜோடோ யாத்திரை ஓரளவுக்குக் கைகொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்றார்.