Published:Updated:

ஈரோடு: கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டு கவுன்சிலரான முடிதிருத்தும் தொழிலாளி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ச.சிவஞானம்

சிவஞானம், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார்.

ஈரோடு: கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டு கவுன்சிலரான முடிதிருத்தும் தொழிலாளி!

சிவஞானம், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார்.

Published:Updated:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ச.சிவஞானம்

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து, இன்று காலை முதல் ஈரோடு மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை, சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் எண்ணப்பட்டுவருகின்றன.

வாக்கு சேகரிக்கும் ச.சிவஞானம்
வாக்கு சேகரிக்கும் ச.சிவஞானம்

அணைக்கட்டுப் பகுதியில் சலூன் கடை நடத்திவரும் ச.சிவஞானம், 1999-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். ஏற்கெனெவே ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. அதன் பின்பு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார்.

அதைத் தொடந்து பகலில் சலூன் கடை பணியோடு, பிராசாரமும் செய்துவந்தார். தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாக்கு சேகரிக்கும் ச.சிவஞானம்
வாக்கு சேகரிக்கும் ச.சிவஞானம்

இது தொடர்பாக ச.சிவஞானம் கூறும்போது, ``சலூன் கடை நடத்திவந்ததால் இந்தப் பகுதி மக்களுடன் பழக வாய்ப்பு ஏற்பட்டது. எனவே, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் கட்சி சார்பில் போராடினேன். அதன் பயனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இன்னும் எனது பணியைச் சிறப்பாகச் செய்வேன்" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism