Published:Updated:

`சமூக சேவை செஞ்சுட்டு இருந்தேன்... இனிமே மக்கள் சேவை செய்வேன்!' - தேர்தல் களம்காணும் திருநங்கை

திருநங்கை

`நான் திருநங்கை. எனக்கு ஆண்களும் பெண்களும் சமம்... அதனால என்னாலான உதவிகளைச் செய்வேன்.' - ராஜம்மாள்.

`சமூக சேவை செஞ்சுட்டு இருந்தேன்... இனிமே மக்கள் சேவை செய்வேன்!' - தேர்தல் களம்காணும் திருநங்கை

`நான் திருநங்கை. எனக்கு ஆண்களும் பெண்களும் சமம்... அதனால என்னாலான உதவிகளைச் செய்வேன்.' - ராஜம்மாள்.

Published:Updated:
திருநங்கை

பொதுச் சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு பாலினம் தவிர்த்து மாற்றுப் பாலினம் என ஒன்று இருப்பதையே பல நேரங்களில் நாம் மறந்துவிடுகிறோம். பொது இடங்களில் கழிவறையிலிருந்து, வேலைவாய்ப்பு வரை பல இடங்களில் பேதங்களைச் சந்தித்துவரும் திருநங்கைகள், திருநம்பிகள் பல சவால்களைத் தாண்டி சாதிப்பது அபூர்வமாகவே இருக்கிறது. அப்படிச் சாதிக்க முன்வருபவர்கள் தங்கள் பாதைகளில் எதிர்கொள்ளும் இன்னல்களை நம்மால் வெறும் வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. மருத்துவர், வழக்கறிஞர், போலீஸ் எனப் பல்வேறு துறைகளில் சாதித்துவரும் இவர்கள், தற்போது அரசியலிலும் களம்காண ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்தமுறை திருநங்கைகள் சிலர் அரசியல் கட்சிகளின் சார்பாகவும், சுயேச்சைகளாகவும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில், சென்னை திரு.வி.க நகரில் பா.ஜ.க சார்பாக ராஜம்மாள் என்னும் திருநங்கை போட்டியிடுகிறார். இறுதிநாளான நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த ராஜம்மாளிடம் பேசினோம்.

ராஜம்மாள்
ராஜம்மாள்

``என்னோட பேரு ராஜா என்கிற ரதி. என் வீடு ஓட்டேரில இருக்கு. நான் கடந்த 10 ஆண்டுகளா பா.ஜ.க கலை மற்றும் கலாசார பிரிவுல மாவட்டத் துணைத் தலைவியாக இருந்தேன். இந்தத் தேர்தலில் ஒரு திருநங்கையாகப் போட்டியிடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இதுக்கு முன்ன சமூக சேவைதான் செஞ்சுட்டு இருந்தோம். இனி தேர்தல்ல வெற்றிபெற்றால் கவுன்சிலரா மக்களுக்கு சேவை செய்வேன். நான் தேர்தல்ல வெற்றி பெற்றா பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பேன். வயதானவர்களுக்கு ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான சிறப்புத் திட்டங்கள் கொண்டுவருவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமூகத்தில் திருநங்கைகள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் மக்களிடம் அஞ்சு, பத்து ரூபாய் கேட்டு வாழ்க்கையை நடத்துறாங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ரொம்ப எளிதில் வீடு வாடகைக்கு கிடைப்பதுபோல திருநங்கைகளுக்கு கிடைக்கிறது இல்லை. அவங்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். அப்பதான் எங்க கஷ்டம் தீரும்.

ராஜம்மாள்
ராஜம்மாள்

நான் திருநங்கை... எனக்கு ஆண்களும் பெண்களும் சமம். அதனால, என்னோட வார்டு மக்களுக்கு என்னாலான உதவிகளை செய்வேன். எனக்கு வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கு நன்றி" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism