Published:Updated:

Exit Polls: மணிப்பூரில் முந்தும் பா.ஜ.க... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Exit Polls - மணிப்பூர் கருத்துக்கணிப்பு

மணிப்பூர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் சொல்வதென்ன?!

Exit Polls: மணிப்பூரில் முந்தும் பா.ஜ.க... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மணிப்பூர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் சொல்வதென்ன?!

Published:Updated:
Exit Polls - மணிப்பூர் கருத்துக்கணிப்பு

மணிப்பூர் தேர்தல்:

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்தச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மணிப்பூரிலுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 28-ம் தேதி முதற்கட்டமாகவும், மார்ச் 5-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும்.

தேர்தல்
தேர்தல்

இந்தத் தேர்தலில், பாஜக 60 இடங்களில் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியமைத்து தேர்தலைச் சந்திக்கிறது. மேலும், நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சியும் தேர்தலைச் சந்திக்கின்றன. இவர்கள் மட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருத்துக்கணிப்பு முடிவுகள்:

இன்று ஐந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த முடிவுகள் பின்வருமாறு...

Exit poll
Exit poll
NDTV

என்.டி.டி.வி :-

பாஜக - 30 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி - 14 இடங்கள்

Republic Exit Polls
Republic Exit Polls
Republic

ரிபப்ளிக் :-

பாஜக - 27 முதல் 31 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி - 11 முதல் 17 இடங்கள்

தேசிய மக்கள் கட்சி - 6 முதல் 10 இடங்கள்

நாகா மக்கள் முன்னணி - 2 முதல் 6 இடங்கள்

மற்றவர்கள் - 3 முதல் 7 இடங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Jan Ki Baat
Jan Ki Baat
Durairaj G

ஜன் கி பாத் :-

பாஜக - 10 முதல் 14 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி - 23 முதல் 28 இடங்கள்

தேசிய மக்கள் கட்சி - 7 முதல் 8 இடங்கள்

நாகா மக்கள் முன்னணி - 5 முதல் 8 இடங்கள்

மற்றவர்கள் - 8 முதல் 9 இடங்கள்

Exit Polls: மணிப்பூரில் முந்தும் பா.ஜ.க... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Durairaj G

இந்தியா டுடே:

பாஜக - 33 முதல் 43 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி - 4 முதல் 8 இடங்கள்

தேசிய மக்கள் கட்சி - 4 முதல் 8 இடங்கள்

மற்றவர்கள் - 6 முதல் 15 இடங்கள்

Exit Polls: மணிப்பூரில் முந்தும் பா.ஜ.க... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Durairaj G

சி வோட்டர்:

பாஜக - 23 முதல் 27 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி - 12 முதல் 16 இடங்கள்

தேசிய மக்கள் கட்சி - 10 முதல் 14 இடங்கள்

மற்றவர்கள் - 3 முதல் 7 இடங்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism