கோவா தேர்தல்:
கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று மனோகர் பாரிக்கர் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. கோவா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 15-ம் தேதியோடு முடிவடைகிறது. கோவா மாநில பொதுத்தேர்தல் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் வெளியாகும்.

இந்தத் தேர்தலில் பாஜக 40 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக பிரமோத் சாவந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், கோவா முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கிறது. கோவாவில் இம்முறை திரிணாமுல் காங்கிரஸ், மகாராஸ்டிரவாடி கோமந்த் கட்சியுடன் கோவாவில் களம் காண்கிறது. மேலும், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. பலமுனைப் போட்டி நிலவுவதால் இம்முறை பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கருத்துக்கணிப்பு முடிவுகள்:
இன்று ஐந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த முடிவுகள் பின்வருமாறு...
என்.டி.டி.வி எக்ஸிட் போல்ஸ்:-
பா.ஜ.க- 16 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 16 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 2 இடங்கள்
ரிபப்ளிக் எக்ஸிட் போல்ஸ்:
பாஜக- 13 முதல் 17 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 13 முதல் 17
ஆம் ஆத்மி கூட்டணி - 2 முதல் 6
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 2 முதல் 4
வீட்டோ எக்ஸிட் போல்ஸ்:
பாஜக- 14
காங்கிரஸ் கூட்டணி - 16
ஆம் ஆத்மி கூட்டணி - 4
மற்றவர்கள் - 6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டைம்ஸ் நவ்:
பாஜக- 14
காங்கிரஸ் கூட்டணி - 16
ஆம் ஆத்மி கூட்டணி - 4
மற்றவர்கள் - 6

இந்தியா டுடே:
பாஜக- 14 முதல் 18 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 15 முதல் 20 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 2 முதல் 5 இடங்கள்
மற்றவர்கள் - 0 முதல் 4 இடங்கள்
சி வோட்டர்:
பாஜக- 13 முதல் 17 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 12 முதல் 16 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 5 முதல் 9 இடங்கள்
மற்றவர்கள் - 0 முதல் 2 இடங்கள்
நியூஸ் எக்ஸ்:
பாஜக- 17 முதல் 19 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 11 முதல் 13 இடங்கள்
ஆம் ஆத்மி - 1 முதல் 4 இடங்கள்
மற்றவர்கள் - 2 முதல் 7 இடங்கள்