Published:Updated:

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக `த்ரில்' வெற்றி! - பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி நிலவரம்

வெற்றிபெற்ற பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத்

பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத் 174 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க-வைச் சேர்ந்த வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றார். இதனால், தி.மு.க வேட்பாளரைவிட ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.க-வின் கோபிநாத் வெற்றிபெற்றார்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக `த்ரில்' வெற்றி! - பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி நிலவரம்

பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத் 174 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க-வைச் சேர்ந்த வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றார். இதனால், தி.மு.க வேட்பாளரைவிட ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.க-வின் கோபிநாத் வெற்றிபெற்றார்.

Published:Updated:
வெற்றிபெற்ற பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத்

ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் பா.ஜ.க வேட்பாளர் 'த்ரில்' வெற்றி பெற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே, தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியிலுள்ள 9-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ரத்னாம்பாள் கண்ணன், வேட்புமனு செய்யும் கடைசி நாள் வரை, அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர், சுயேச்சை என்று வேறு எந்தக் கட்சி சார்பிலும், எந்த வேட்பாளரும் மனுத்தாக்கல் செய்யாததால், போட்டியின்றி 9-வது வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க 11 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி ஒரு வார்டிலும், பா.ஜ.க., அ.தி.மு.க., சுயேச்சை தலா ஒரு வார்டையும் கைப்பற்றின. இதில், பா.ஜ.க சார்பில் 3-வது வார்டில் போட்டியிட்ட கோபிநாத், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

வெற்றிப்பெற்ற பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத்
வெற்றிப்பெற்ற பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3-வது வார்டில் தி.மு.க சார்பில் சுரேஷ், பா.ஜ.க சார்பில் கோபிநாத், அ.தி.மு.க சார்பில் தர்மலிங்கம், அ.ம.மு.க சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத் 174 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்த வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றார். இதனால், தி.மு.க வேட்பாளரைவிட ஒரே ஓர் ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.க-வின் கோபிநாத் வெற்றிபெற்றார். அதேபோல், அ.தி.மு.க வேட்பாளருக்கு 5 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளருக்கு 51 வாக்குகளும் கிடைத்தன. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism