Published:Updated:

Live Updates: நாங்குநேரியை கைப்பற்றியது அ.தி.மு.க!

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்ஸ்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
24 Oct 2019 2 PM

நாங்குநேரியில் அ.தி.மு.க வெற்றி!

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி. காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியை அ.தி.மு.க கைப்பற்றியது.

24 Oct 2019 1 PM

உண்மைக்கு கிடைத்த வெற்றி!

இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க வுக்கு சாதகமாக வந்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ``கடந்த தேர்தல்களில் தி.மு.க பொய் பிரசாரம் செய்தது. இந்த தேர்தலில் உண்மை வென்றுள்ளது” என்றார்.

24 Oct 2019 12 PM

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வெற்றி உறுதி!

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வின் வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 35,000 வாக்குகளே எண்ணப்படவுள்ள நிலையில் 37,000 வாக்குகள் அதிமுக அதிகமாக பெற்றுள்ளது.

24 Oct 2019 12 PM

முன்னிலை நிலவரம்!

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க 32,369 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

அ.தி.மு.க - 81,460

தி.மு.க - 49,091

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க 12,830 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

அ.தி.மு.க - 42,250

தி.மு.க - 29,420

24 Oct 2019 11 AM

அ.தி.மு.க கொண்டாட்டம்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது. விக்கிரவாண்டியில் 27,868 வக்குகளிலும், நாங்குநேரியில் 8,763வாக்குகளும் அ.தி.மு.க முன்னிலை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க தொண்டகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

24 Oct 2019 11 AM

`விக்கரவாண்டியில் வேகம்; நாங்குநேரியில் மந்தம்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதுவரை விக்கிரவாண்டியில் 8 சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. நாங்குநேரியில் 3 சுற்று முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் 16,706 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் 3033 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

24 Oct 2019 10 AM

மகாராஷ்டிரா, ஹரியானா நிலவரம்!

Live Updates: ஹரியானாவில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!
24 Oct 2019 10 AM

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் 15,200 வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கிறார். நாங்குநேரியில் அ.தி.மு.க வேட்பாளர் 3,033 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

24 Oct 2019 10 AM

கொண்டாட்டத்தில் அ.தி.மு.க!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. தற்போது, இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் முன்னிலையைக் கொண்டாடிவருகின்றனர்.

24 Oct 2019 10 AM

அ.தி.மு.க தொடர் முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளது. சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, அ.தி.மு.க வேட்பாளர் தி.மு.க வேட்பாளரைக் காட்டிலும், 7,991 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 4 -ம் சுற்று முடிவுகள்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 4 -ம் சுற்று முடிவுகள்!

நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரை அ.தி.மு.க வேட்பாளர் 1,872 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இங்கு, முன்னிலை பெறுவதில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

24 Oct 2019 9 AM

தொடர் ஏறுமுகத்தில் அ.தி.மு.க.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க 2,047 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

அ.தி.மு.க - 5,312

தி.மு.க - 3,265

விக்கிரவாண்டி தொகுதி
விக்கிரவாண்டி தொகுதி

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் 1, 600 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

அ.தி.மு.க - 6,300

காங்கிரஸ் - 4,700

24 Oct 2019 9 AM

ஒரு மணி நேரம்தான்...

Live Updates:  நாங்குநேரியை கைப்பற்றியது அ.தி.மு.க!

புதுவையில், காமராஜ் நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

24 Oct 2019 9 AM

நாங்குநேரி, விக்கிரவாண்டி வாக்கு எண்ணும் மையம்!

24 Oct 2019 9 AM

அ.தி.மு.க முன்னிலை!

விக்கிரவாண்டி தொகுதி முதல் சுற்றில் அ.தி.மு.க 620 வாக்குகள் முன்னிலையில் உள்ளது!

அதிமுக - 1,930

திமுக - 1,310

நாங்குநேரியில் அ.தி.மு.க வேட்பாளர் 1, 600 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

24 Oct 2019 8 AM

காமராஜ்நகர்!

காமராஜ்நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் மற்றும் இரண்டு சுற்று சேர்த்து 3,730 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

24 Oct 2019 8 AM

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அ.தி.மு.க முன்னிலை!

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க முன்னிலை பெற்றுள்ளது.

24 Oct 2019 8 AM

விக்கிரவாண்டி!

விக்கிரவாண்டி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அ.தி.மு.க வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

24 Oct 2019 8 AM

காமராஜ்நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை!

புதுவையில் காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதய நிலவரப்படி காங்கிரஸ் 3019 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 2092 வாக்குகளுடன் பிந்தங்கியுள்ளது.

24 Oct 2019 8 AM

தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிகை பணி தாமதமாக தொடங்கியது. பாதுகாப்பு அறையில் இருந்து இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து வர தாமதமானது.

24 Oct 2019 8 AM

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.

24 Oct 2019 8 AM

பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Live Updates:  நாங்குநேரியை கைப்பற்றியது அ.தி.மு.க!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இ.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில், காவல்துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

24 Oct 2019 8 AM

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
விகடன்

மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர், நாடு தற்போது இன்னொரு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. இந்தியா முழுவதும் 51 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளும் அடக்கம். இதுதவிர இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸின் வசந்தகுமார், எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய, அது காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த ராதாமணி உயிரிழந்ததால், அதுவும் காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

நாங்குநேரித் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அ.தி.மு.க சார்பில் நாராயணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். மொத்தம் 23 பேர் போட்டியிடுகின்றனர்.