Published:Updated:

பார்வை மாற்றுத்திறனாளி வாக்கை தேர்தல் அலுவலர் பதிவுசெய்யலாமா?! - நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

பார்வை மாற்றுத்திறனாளி

பார்வை மாற்றுத்திறனாளி வாக்கை வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்ததால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பரபரப்பு எற்பட்டது.

பார்வை மாற்றுத்திறனாளி வாக்கை தேர்தல் அலுவலர் பதிவுசெய்யலாமா?! - நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

பார்வை மாற்றுத்திறனாளி வாக்கை வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்ததால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பரபரப்பு எற்பட்டது.

Published:Updated:
பார்வை மாற்றுத்திறனாளி

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 510 உள்ளாட்சிப்  பதவிகளுக்கு இன்று (09.07.2022) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றுவருகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆயிரத்து 22 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், கூத்தியாம்பேட்டை ஊராட்சியில் 16-வது வார்டு கொள்ளிடம் ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்ததை அடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று அங்கு தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதில், அ.தி.மு.க .சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மஞ்சு என்பவருக்குக் கட்சி மேலிடத்திலிருந்து உரிய கடிதம் கிடைக்காததால், சுயேச்சை சின்னமாகக் கைப்பை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடும் சித்தாரா புஷ்பராஜ் என்பவருக்கும் குலையுடன்கூடிய தென்னைமரம் சுயேச்சைச் சின்னமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க சார்பில் நிர்மலா மணிமாறன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பார்வை மாற்றுத்திறனாளி  வாக்கை தேர்தல் அலுவலர் பதிவுசெய்யலாமா?
பார்வை மாற்றுத்திறனாளி வாக்கை தேர்தல் அலுவலர் பதிவுசெய்யலாமா?

இந்தச் சூழலில் கூத்தியாம்பேட்டை ஊராட்சியில், ஒரு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர் பார்வை மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவருக்கு வாக்களிக்க உதவி செய்திருக்கிறார். இதனைக் கண்ட அ.தி.மு.க உள்ளிட்ட கட்சியினர், ``பூத் ஏஜென்ட்டுகள் மட்டுமே வேட்பாளர்களுக்கு வாக்களிக்க  உதவி செய்ய வேண்டும்’’ என்றும், ``நீங்கள் எவ்வாறு உதவி செய்தீர்கள்...  மூதாட்டியின் வாக்கை மாற்றி நீங்கள் உங்களுடைய ஆதரவாளருக்கு பதிவு செய்திருக்கிறீர்கள்" எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.  தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலரிடம் `இதற்கு மேல் இவ்வாறு நடைபெறக் கூடாது" என உறுதியைப் பெற்றுவிட்டு சமாதானத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது.