Published:Updated:

வாக்குறுதிக்குள் வராதவர்கள் வாழும் பகுதி... துறைமுகம் தொகுதி மக்களின் பிரச்னை என்ன?

துறைமுகம்

“எங்களோட தேவை வீடு மட்டும்தான்; வீடு இருந்தா எங்க வாழ்க்கை மாறிடும். ஒரு மனுஷனுக்கு முக்கியத் தேவை சோறு... அத நாங்க பாத்துக்கிறோம். எங்களுக்கு வீடு மட்டும் தந்தா போதும்!”

வாக்குறுதிக்குள் வராதவர்கள் வாழும் பகுதி... துறைமுகம் தொகுதி மக்களின் பிரச்னை என்ன?

“எங்களோட தேவை வீடு மட்டும்தான்; வீடு இருந்தா எங்க வாழ்க்கை மாறிடும். ஒரு மனுஷனுக்கு முக்கியத் தேவை சோறு... அத நாங்க பாத்துக்கிறோம். எங்களுக்கு வீடு மட்டும் தந்தா போதும்!”

Published:Updated:
துறைமுகம்

திராவிடக் கட்சிகள் இரண்டும் தேர்தல் வாக்குறுதிகளாக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட சென்னையின் பூர்வகுடி மக்களுக்கானதாக இல்லை.

துறைமுகம் தொகுதி
துறைமுகம் தொகுதி

சென்னையின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான துறைமுகம். ஆனால், இங்கு ஆண்டாண்டுக் காலமாக வாழும் பூர்வகுடி மக்களுக்கு நடைபாதைதான் வீடு; உடைந்த தகரம்தான் கூரை; கால் எட்டும் தொலைவில் கதவு! பிறந்து வளர்ந்த ஊரில் நிம்மதியாக வாழ இடமில்லாமல் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கு வாழும் மக்களுக்குத் தனித்தனியான கதவு எண்கள் கிடையாது; 4 குடும்பத்திற்கு ஒரு கதவு எண். சிலருக்கோ குடியுரிமையே கிடையாது. இங்குள்ளவர்களில் ஏராளமானோர் மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடுபடுகின்றனர். இதனால், அரசின் நலத் திட்டங்கள் இவர்ளை எட்டுவது இல்லை; அடிப்படை தேவைகள் கூட இல்லாத நிலையில்தான் இவர்கள் இருக்கின்றனர். மாநிலத்தின் தலைநகரிலே பூர்வகுடி மக்கள் அடிப்படை உரிமை, வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை இழந்து நிற்கிறார்கள்.

“பல வருஷமா இந்தத் துறைமுகம் தொகுதியில ரெண்டு திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி எம்.எல்.ஏ-வா வந்திருக்காங்க; ஆட்சிதான் மாறுது... எங்க மக்களோட நிலை மாறல. நாங்க வாழ்ந்த எடத்துல இப்ப வடக்குல இருந்து வந்தவங்க தங்கிருக்காங்க. பூர்வகுடிகளான நாங்க ரோட்டோரத்தில் வாழ்றோம்” என்கின்றனர்.

துறைமுகம் தொகுதி நிலவரம்
துறைமுகம் தொகுதி நிலவரம்

துறைமுகம் தொகுதியில் மீனவர்களுக்கு முன்னுரிமை இல்லை; வட இந்தியர்களுக்கே முன்னுரிமை. இங்கே வாழ்ந்தவர்களைத் துரத்தி மற்றவர்களைக் குடியமர்த்துவது தவறு, இல்லையா?

“எங்களோட தேவை வீடு மட்டும்தான்; வீடு இருந்தா எங்க வாழ்க்கை மாறிடும். ஒரு மனுஷனுக்கு அடிப்படைத்தேவை சோறு. அதக் கூட நாங்க பாத்துக்கிறோம். எங்களுக்கு வீடு மட்டும் தந்தா போதும்!” என தங்களின் ஒரே கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எங்களுக்குத் தேவையான வீடு கிடைச்சது. ஆனா நாங்க வாழ்ந்த எடத்தில் இல்லை. நாடு கடத்துற மாதிரி எங்களை அழிக்க நெனைக்கிறாங்க. சென்னையில இருக்கிறவங்களுக்குக் காஞ்சிபுரத்தில் வீடு தர்றாங்க. வாழ்ந்த எடத்தை விட்டு வேறு எடத்துக்கு போனா, கடலை மட்டுமே நம்பி வாழ்ந்த துறைமுகம் தொகுதி ஜனங்க, கடலே இல்லாத ஊர்ல போய் என்ன செய்றது?” என்கிற அவர்கள் குரலில் நியாயம் ஒலிக்கிறது.

அரசியல்வாதிகள் இங்குள்ள மக்களின் வறுமை, அறியாமை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்; கேள்வி கேட்க விடாமலும், வளரவிடாமலும் தடுத்து தங்கள் வளர்ச்சியை முடக்குகின்றனர் என்பது இங்குள்ள இளைஞர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருக்கிறது.

துறைமுகம் தொகுதி
துறைமுகம் தொகுதி

இங்குள்ள சிறுவர்களுக்குப் பள்ளிக் கல்வி முறையாகக் கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் படிக்கும் சூழ்நிலையில் இந்தச் சிறுவர்கள் இல்லை. கல்வியில்லாமல் விழிப்புணர்வு அற்றவர்களாக இவர்கள் வளர்வதால், உரிமைகள் கேட்கப்படுவதும் இல்லை, பெறப்படுவதும் இல்லை. இதனால், இந்த வாழ்க்கை நிலைக்குத் தாமாகவே பழகிக் கொள்கிறார்கள்.

“நல்லது கெட்டது கொண்டாட எங்களுக்குனு ஒரு எடம் இல்ல... எலெக்‌ஷன் டைம்ல எங்க ஜனங்களுக்குப் பணம் கொடுத்து ஏமாத்துறாங்க. எங்க பகுதி ஜனங்களுக்கு விழிப்புணர்வு இல்லாதனாலயும், கஷ்டப்படுறதுனாலயும் பணத்தை வாங்கிட்டு ஓட்டு போட்டுடுறாங்க. இவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுற வரைக்கும் நாங்க இந்த நெலமைலதான் இருப்போம்” என்றார் அந்த இளைஞர்களில் ஒருவர்.

உண்மையில் இங்குள்ள மக்கள் தேர்தல் வாக்குறுதிகளைப் பார்ப்பதில்லை; ஏனென்றால் அது அவர்களுக்கு உபயோகமற்றதாகவே தோன்றுகிறது. தேர்தல்கள் ஒருபோதும் இவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்ததில்லை, இனியும் ஏற்படுத்தப் போவதில்லை என்கிறார்கள். தேர்தல் காலங்கள் இவர்களுக்குச் சிறிய வருமானம் கொடுக்கும் காலமாக மட்டுமே இருக்கிறது!

மக்கள் விழிப்புணர்வடைந்து தங்கள் உரிமைகளைப் போராடிப் பெற்றால்தான் உண்டு!

- அலன் கிளிண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism