Published:Updated:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதையடுத்து, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர், இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதையடுத்து, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர், இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Published:Updated:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ம் தேதி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பிப்ரவரி 22-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. மேலும் ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கலும், பிப்ரவரி 5 அன்று வேட்புமனு பரிசீலனையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

இவ்வாறு நகர்ப்புறத் தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடந்துவரும் இந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளார். இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துதல், கண்காணிப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்துதல், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கவனித்தல், பறக்கும் படை அமைத்தல், மின்னணு இயந்திரங்களைச் சரிபார்த்தல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை அதிகரித்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

முன்னதாக, நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்கவிருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகளை, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நாள்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால் மாநில தேர்தல் ஆணையத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.