Published:Updated:

க்ளைமாக்ஸில் நடந்த பயங்கரமான ட்விஸ்ட்! - ஈரோடு கிழக்கில் நடந்தது என்ன?

ஈரோடு
ஈரோடு

1,000 கோடி ரூபாயில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தத் தொகுதிதான் அதிகமாகப் பயனடைகிறது. இத்தகைய காரணங்களால்தான் இந்தத் தொகுதியை வாங்கினால், ஈஸியாக ஜெயித்துவிடலாம் என அனைத்துக் கட்சிகளும் கணக்கு போட்டு வேலைபார்த்தன.

ஈரோடு மாநகராட்சியில் 36 வார்டுகளை மட்டுமேகொண்ட, முழுக்க முழுக்க நகர்ப்புறப் பகுதியிலான தொகுதி ஈரோடு கிழக்கு. மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில் சிறிய தொகுதியும் இதுதான். ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், நேதாஜி காய்கறி மார்க்கெட், அப்துல்கனி ஜவுளிச் சந்தை, கடைவீதிகள் என ஈரோடு மாநகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் ‘ஈரோடு கிழக்கு தொகுதி’க்குள்தான் இருக்கின்றன.

ஜவுளி வியாபாரம், விசைத்தறித் தொழிலைப் பிரதானமாகக்கொண்ட தொகுதி இது. இங்கு கொங்கு வேளாளர், முதலியார் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்கள் போக அருந்ததியர், சிறுபான்மையினர், வட இந்தியர்கள், இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரும் கணிசமான எண்ணிக்கையில் வசித்துவருகின்றனர். தொகுதியில் பெரிதாக விவசாயம் இல்லை. இதனால், விவசாயிகளின் எதிர்ப்பு என்ற பிரச்னை தொகுதியில் இல்லை. பரப்பளவில் சிறிய தொகுதி என்பதால் பிரசாரம் செய்ய எளிதாக இருக்கும்.

ஈரோடு
ஈரோடு

மாநகரிலுள்ள வியாபார மற்றும் சாதியச் சங்கங்களைச் சந்தித்தால் ஒட்டுமொத்த ஓட்டுகளை அறுவடை செய்துவிடலாம். இதுபோக, 1,000 கோடி ரூபாயில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தத் தொகுதிதான் அதிகமாகப் பயனடைகிறது. இத்தகைய காரணங்களால்தான் இந்தத் தொகுதியை வாங்கினால், ஈஸியாக ஜெயித்துவிடலாம் என அனைத்துக் கட்சிகளும் கணக்கு போட்டு வேலைபார்த்தன.

2016 தேர்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரான முத்துசாமி, தி.மு.க தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் எனப் பலரும் இந்தத் தொகுதியில் சீட் கேட்டனர். வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்குமெனக் கருதி கடைசி நேரத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும் இந்தத் தொகுதியை வாங்கக் கடுமையாக முயன்றார்.

மாநகரின் மையத்தில், வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள இந்தத் தொகுதியை இருபெரும் திராவிடக் கட்சிகளும், கூட்டணிக்கு விட்டுத்தர மாட்டார்கள் என்ற நிலையே தென்பட்டது.

அதேபோல அ.தி.மு.க-வில் ஈரோடு மேற்குத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வும், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான கே.வி.ராமலிங்கம், சிட்டிங் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு, பெரியார் நகர் அ.தி.மு.க பகுதிச் செயலாளர் மனோகரன் எனப் பலரும் தீவிரமாகக் காய்நகர்த்தினர். மாநகரின் மையத்திலுள்ள, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள இந்தத் தொகுதியை இருபெரும் திராவிடக் கட்சிகளும், கூட்டணிக்கு விட்டுத்தர மாட்டார்கள் என்ற நிலையே தென்பட்டது. ஆனால், கடைசிநேர ட்விஸ்ட் ஆக இந்தத் தொகுதியை இருபெரும் திராவிடக் கட்சிகளும் லட்டுபோல தூக்கி கூட்டணிக்குத் தாரை வார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், அ.தி.மு.க கூட்டணியில் இந்தத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஒதுக்கீடு விவரம் வெளியானதும் இருபெரும் கட்சிகளில் சீட் கேட்ட சீனியர்கள் மட்டுமல்லாமல், அடிமட்டத் தொண்டர்களும் அதிர்ந்துபோயிருக்கின்றர். காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா களமிறங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. த.மா.கா சார்பில் இளைஞரணித் தலைவர் யுவராஜா இத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

யுவராஜா - திருமகன் ஈ.வெ.ரா
யுவராஜா - திருமகன் ஈ.வெ.ரா

`கட்சிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களைச் சந்தித்து கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறோம். அப்படியிருக்க கூட்டணிக்கு எப்படி சீட் கொடுக்கலாம்... அரசியல் லாபி செய்து சீட் வாங்கிவிடலாமென்றால், சாதாரணத் தொண்டன் கடைசி வரை கொடி பிடித்துக்கொண்டு சாக வேண்டுமா?’ என இரு திராவிடக் கட்சிகளிலும் கடுமையான அதிருப்தி அலை வீசுகிறது. சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் இருபெரும் திராவிடக் கட்சிகளின் நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்து வேலை பார்ப்பார்களா அல்லது அவர்களுடைய வெற்றிக்கு வில்லன் ஆவார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு