Published:Updated:

டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குவியும் வாழ்த்துகள்! #LiveUpdates

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

11 Feb 2020 8 AM

முன்னணி நிலவரம்!

ஆம் ஆத்மி - 58

பா.ஜ.க - 12

காங்கிரஸ் - 00

11 Feb 2020 1 PM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தி.மு.க மக்களவை உறுப்பினரான கனிமொழி, ``மக்கள் வெறுப்பு அரசியலுக்கு பெரும் நோ சொல்லியுள்ளனர்" என ட்வீட் செய்துள்ளார். மேலும் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் பெரும் வெற்றிக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``டெல்லியில் மீண்டும் பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை விட வளர்ச்சி தான் முக்கியம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது" என ட்வீட் செய்துள்ளார்.

11 Feb 2020 12 PM

பிரசாந்த் கிஷோர் நன்றி!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சியானது முன்னிலையில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கெஜ்ரிவால் முதல்வராக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மிக்குத் தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்துக்கொடுத்த தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர், டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

11 Feb 2020 11 AM

அபார முன்னிலையில் ஆம் ஆத்மி!

டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னியையில் இருந்து வருகிறது தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சியானது 55 இடங்களிலும், பா.ஜ.க 15 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. டெல்லையில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 52% வாக்குகளை பெற்றுள்ளது.

11 Feb 2020 8 AM

வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தற்போது நடைபெறும் ஆம் ஆத்மி கட்சியே இந்தத் தேர்தலிலும் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்குப் பின்னரே, 62.59 சதவிகித வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தம் 2,700 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.

டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குவியும் வாழ்த்துகள்! #LiveUpdates

இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவுகிறது. வாக்குகள் எண்ணும் பணியானது 21 மையங்களில் நடக்கிறது. மாலை அளவில் முழுமையான முடிவுகள் தெரியும் என்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் முன்னணி நிலவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு