Published:Updated:

பீகார்: `மோடி உங்களுடன் டீ அருந்தினாரா?' - பழசை நினைவுபடுத்தி வாக்கு சேகரித்த ராகுல் காந்தி

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

``பீகார் மக்கள் ஏன் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும்?'' - ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் இன்று (அக்.27) 71 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. அடுத்தகட்ட வாக்குப் பதிவுகளுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் பீகார் மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஈடுபட்டு வருகின்றன.

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல்
 பீகார் தேர்தல்: 375 கோடிஸ்வரர்கள்... 61 `ரெட் அலர்ட்' தொகுதிகள் - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இன்று பீகார் மாநிலம் சாம்பரன் (Champaran) பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், ``பணமதிப்பிழப்பு, ஊரடங்கு உள்ளிட்ட விஷயங்களைக் கடைசி நேரத்தில்தான் அறிவித்தார் பிரதமர் மோடி. இதனால் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேநேரத்தில், தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்'' என்று பேசினார். மேலும்,

இங்குப் பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக வந்தபோது இந்தப் பகுதியில் சக்கரை ஆலை அமைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் உங்கள் அனைவருடனும் டீ அருந்துவதாகச் சொல்லியிருந்தார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் உங்களுடன் டீ அருந்தினாரா?
ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி

``பஞ்சாபில் தசரா நிகழ்ச்சியில் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இந்தச் சம்பவம் வருத்தமளிக்கிறது. அவர் நம் நாட்டின் பிரதமர் என்பதால் இது நடந்திருக்கக்கூடாது. ஆனால், இப்படித்தான் மோடி குறித்து பஞ்சாப் விவசாயிகள் உணர்கிறார்கள்'' என்றும் பேசினார் ராகுல் காந்தி. மேலும் பேசிய அவர்...

பீகார் மக்கள் ஏன் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும்? பீகார் சகோதர, சகோதரிகளிடம் எதில் குறை உள்ளது? இல்லை, உங்கள் முதல்வரிடமும் பிரதமரிடமும் தான் குறைகள் உள்ளன.
ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ஹரியானா: காரில் ஏற மறுத்த இளம்பெண்... பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற இளைஞர்! - என்ன நடந்தது?

``இப்போதெல்லாம் பிரதமர் மோடி வேலையின்மை குறித்துப் பேசுவதே இல்லை. அவரது பொய்களைப் பீகார் மக்கள் இனி நம்பத் தயாராக இல்லை. பல தசாப்தங்களாக மத்தியில், காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென எங்களுக்குத் தெரியும். நிச்சயமாக எங்களிடம் சில குறைகள் உள்ளன. ஆனால், எங்களுக்குப் பொய்கள் சொல்லத் தெரியாது'' என்று பேசினார் ராகுல்.

இதற்கிடையில், ராகுல் காந்தி இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நீதி, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளுக்காக இந்த முறை உங்கள் வாக்கு பெருங்கூட்டணிக்கு மட்டுமே. பீகார் முதற்கட்ட வாக்குப் பதிவில் வாக்களிக்க உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்
இதையடுத்து, ``28 மணிநேரத்துக்கு முன்பாகவே வாக்கு சேகரிக்கும் நேரம் முடிவடைந்துவிட்டது. அப்படியிருந்தும் முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய பின்னர் வாக்கு சேகரிக்கும் வகையில் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருக்கிறார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்'' என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பலரும் குற்றஞ்சாட்டினர். அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க-விலிருந்து இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரைக்கு