Published:Updated:

மாநகராட்சித் தேர்தல்: சென்னையில் காங்கிரஸுக்கு 17 வார்டுகளை ஒதுக்கியது திமுக!

ஸ்டாலின் - அழகிரி

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மாநகராட்சித் தேர்தல்: சென்னையில் காங்கிரஸுக்கு 17 வார்டுகளை ஒதுக்கியது திமுக!

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
ஸ்டாலின் - அழகிரி

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் தங்களின் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்துவிட்டது.

தி.மு.க ம.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்டக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தேர்தல் மேற்பார்வையாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில், தி.மு.க - காங்கிரஸ் இடப் பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

ரமேஷ் சென்னிதாலா
ரமேஷ் சென்னிதாலா

அதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், வார்டு பங்கீடு குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில நாள்களாக இழுபறியில் சென்றுகொண்டிருந்த தி.மு.க-காங்கிரஸ் இடையேயான வார்டு பங்கீடு இன்று முடிவு செய்யப்படும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

பெரும்பாலான மாவட்டங்களில் தி.மு.க - காங்கிரஸ் இடையேயான வார்டு பங்கீடு சுமுகமாக முடிவானது. ஆனால், சென்னையில் மட்டும் தொடர்ந்து ஆலோசனையில் இருந்தது. மேலும், காங்கிரஸ் 20 இடங்களைக் கேட்டதாகவும், தி.மு.க 14 இடங்களே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் இந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism