Published:Updated:

`உதயநிதிதான் ரோல் மாடல்...' - சென்னையில் 22 வயது திமுக இளம் வேட்பாளர் வெற்றி!

நிலவரசி துரைராஜ்

சென்னை மாநகராட்சி 136-வது வார்டில் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றிபெற்றிருக்கிறார்.

`உதயநிதிதான் ரோல் மாடல்...' - சென்னையில் 22 வயது திமுக இளம் வேட்பாளர் வெற்றி!

சென்னை மாநகராட்சி 136-வது வார்டில் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றிபெற்றிருக்கிறார்.

Published:Updated:
நிலவரசி துரைராஜ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த முறை நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில், இளைஞர்கள், பெண்கள், திருநங்கைகள் எனப் பலரும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால், தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவிவருகிறது.

நிலவரசி துரைராஜ்
நிலவரசி துரைராஜ்

இந்த நிலையில், சென்னை 136-வது வார்டில் 22 வயதான திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் 7,222 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அறிவுச்செல்வி 5,112 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள். அதனால், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் நிலவரசி வெற்றிபெற்றிருக்கிறார். தற்போது சென்னையின் 22 வயது இளம் கவுன்சிலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நிலவரசி துரைராஜ், ``எனக்கு அரசியல் ரோல் மாடல் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்தான்’’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism