Published:Updated:

வேலூர் மாநகராட்சி: ராமதாஸ் ட்வீட்டால் கவனம்பெற்ற 24-வது வார்டில் திமுக வெற்றி!

தி.மு.க வேட்பாளர் சுதாகர்

ராமதாஸ் ட்வீட்டால் கவனம்பெற்ற வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் சுதாகர் வெற்றிபெற்றுள்ளார்.

வேலூர் மாநகராட்சி: ராமதாஸ் ட்வீட்டால் கவனம்பெற்ற 24-வது வார்டில் திமுக வெற்றி!

ராமதாஸ் ட்வீட்டால் கவனம்பெற்ற வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் சுதாகர் வெற்றிபெற்றுள்ளார்.

Published:Updated:
தி.மு.க வேட்பாளர் சுதாகர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது. வேலூர் மாநகராட்சி, 24-வது வார்டு பா.ம.க வேட்பாளர் பரசுராமனைக் கடத்திச் சென்று, தி.மு.க தரப்பு மிரட்டியதாக, கடந்த 6-ம் தேதி இரவு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் குற்றம்சாட்டியிருந்தார். மறுநாள் காலையே, வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் ட்விட்டரிலேயே ராமதாஸின் அந்தப் பதிவுக்கு பதிலடி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து, பா.ம.க., தி.மு.க இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் முற்றியது. இதனால், மாநகராட்சியின் 60 வார்டுகளிலேயே, இந்த 24-வது வார்டு தேர்தல் மட்டும் கவனம்பெற்றது. இங்கு அ.தி.மு.க போட்டியில்லை. அ.தி.மு.க வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதால், தி.மு.க-வும், பா.ம.க-வும் நேரடியாக மோதின.

தி.மு.க வேட்பாளர் சுதாகர்
தி.மு.க வேட்பாளர் சுதாகர்

வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த வார்டில் பா.ம.க வேட்பாளரின் நிலையற்ற முடிவால், வாக்குகள் தி.மு.க பக்கம் மடைமாறின. அமைதியாக இருந்தபடியே களத்தில் முன்னேறிச் சென்றார் தி.மு.க வேட்பாளர் சுதாகர். இந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் சுதாகர் வெற்றிபெற்றிருப்பது, ராமதாஸ் தரப்பை ஆட்டம்காணச் செய்துள்ளது. தி.மு.க-வின் வெற்றி வேட்பாளர் சுதாகருக்கு 42 வயதாகிறது. அவரின் சொத்து மதிப்பு ரூ.8.01 கோடி எனக் கணக்கு காட்டியிருக்கிறார். அவரின் மனைவி பெயரில் 21 லட்சம் ரூபாய் சொத்துகள் இருக்கின்றன. சுதாகர் பி.இ சிவில் இன்ஜினீயரிங் படித்தவர் என்பதும் அவரின் கிராப்பை உயர்த்திக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism