Published:Updated:

`எங்க வேட்பாளரைக் கைவிட்டுடாதீங்க!' - வைரலாகும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் `டீக்கடை' பிரசாரம்

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, டீ வடை சாப்பிட்டபடி வாக்கு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

டீக்கடை யில் கே.என்.நேரு
டீக்கடை யில் கே.என்.நேரு

உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசார இறுதிநாளில் திருவெறும்பூர் பகுதியில் கொட்டும் மழையில் கே.என்.நேரு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

டீக்கடையில்  பிரசாரம்  செய்யும் கே.என்.நேரு
டீக்கடையில் பிரசாரம் செய்யும் கே.என்.நேரு

தொடர்ந்து அடுத்தகட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரத்தை தொடங்கிய அவர், துறையூர், மணிகண்டம் ஒன்றியங்களில் வலம்வருகிறார். அப்படி பிரசாரத்துக்குப் போகும் ஊர்களில், சில இடங்களில் காரை நிறுத்தி, அங்கிருக்கும் டீக்கடைக்குள் சகாக்களுடன் நுழைகிறார்.

சட்டென்று கடையில அமர்ந்து, திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன், காடுவெட்டி தியாகராஜன், உதயசூரியன் எம்.எல்.ஏ சகிதமாக டீ, வடை சாப்பிட்டபடியே, வேட்பாளரின் பெயரைச் சொல்லி, ``வேட்பாளரைக் கைவிட்டு விடாதீர்கள்'' என சென்டிமென்டாக பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

குழந்தையுடன் கே.என்.நேரு
குழந்தையுடன் கே.என்.நேரு

அதைப் பார்ப்பவர்களும், `கண்டிப்பாக ஓட்டு போடுறோம், நிச்சயம் நீங்க நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற வைப்போம்' என அங்கிருப்பவர்கள் கூறினால்தான் அங்கிருந்து நகர்கிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதிகளில், கே.என்.நேரு, தேர்தல் விதிமுறைகளை மீறி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அவரது பிரசார வாகனத்தை மறித்து மாற்றுக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த விவகாரம், சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்குப் போனது.

தயங்கிய ஸ்டாலின்; நம்பிக்கை கொடுத்த ஜெகன் குடும்பம்!' - அறிவாலயத்தின் `கே.என்.நேரு அஸ்திரம்'

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் பிரசாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாளை மாலை தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் திருச்சியிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.