சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அந்தப் பகுதியின் தி.மு.க வட்டச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார். செல்வம், மாநகராட்சி தேர்தலில்,188-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட தி.மு.க சார்பில் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், செல்வம் கடந்த 1-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தி.மு.க வட்டச் செயலாளர் செல்வம் இறந்ததால் அவருடைய மனைவி சமீனா செல்வம், தி.மு.க வேட்பாளராக 188-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். இந்த நிலையில், செல்வத்தின் மனைவி 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism