Published:Updated:

ஈரோடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோட்டையைக் கைப்பற்றிய திமுக!

முதல்வர் ஸ்டாலின், செங்கோட்டையன்

செங்கோட்டையனின் கோட்டையான கோபி நகராட்சியில் தொடர்ந்து 3 முறை தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றுள்ளதோடு, செங்கோட்டையனின் கோட்டையில் பெரும் விரிசலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோட்டையைக் கைப்பற்றிய திமுக!

செங்கோட்டையனின் கோட்டையான கோபி நகராட்சியில் தொடர்ந்து 3 முறை தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றுள்ளதோடு, செங்கோட்டையனின் கோட்டையில் பெரும் விரிசலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின், செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் மொத்தமுள்ள வாக்காளர்களான 48 ஆயிரத்து 247 வாக்காளர்களில், 35 ஆயிரத்து 141 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர். இது 72.84 சதவிகித வாக்குப்பதிவு.

கோபி நகராட்சியில் தலைவர் பதவியை, கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நல்லசாமியும், 2001-ம் ஆண்டு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த கந்தவேல் முருகனும், 2006 மற்றும் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரேவதி தேவியும் பதவி வகித்துள்ளனர். கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க 23 வார்டுகளைக் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோபி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைவர் பதவி அ.தி.மு.க வசமே இருந்துவந்துள்ளது. ஏறத்தாழ முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அசைக்க முடியாத கோட்டையாகவே இருந்துவந்தது. இந்நிலையில், நான்காவது முறையாக அ.தி.மு.க தலைவர் பதவியை மேலும் தொடர வேண்டுமானால், அதிக வார்டுகளில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெற்றிபெறவேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், தி.மு.க 14 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றதன் மூலம், கோபி நகராட்சி தி.மு.க வசமாகியுள்ளது. அ.தி.மு.க, 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தி.மு.க கூட்டணி கோபி நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

செங்கோட்டையனின் கோட்டையான கோபி நகராட்சியில் தொடர்ந்து மூன்று முறை தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றுள்ளதோடு, செங்கோட்டையனின் கோட்டையில் பெரும் விரிசலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism