Published:Updated:

`வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும்!' -தலைமை தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என மத்திய அரசைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.

`வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும்!' -தலைமை தேர்தல் ஆணையம்

ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என மத்திய அரசைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.

Published:Updated:
தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த மாதம் 15-ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்ற சில நாள்களிலேயே, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரைகளை அனுப்பியிருந்தார் ராஜீவ் குமார். அதில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய பரிந்துரைகளின்மீது மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ராஜீவ் குமார்
ராஜீவ் குமார்
ட்விட்டர்

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்கிறது. அதில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என மத்திய அரசைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் நடைபெறவிருக்கும் இடங்களில் தேதி அறிவித்த பின்னர், அனைத்துக் கட்டங்களிலும் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும், அவற்றை வெளியிடுவதற்கும் சில கட்டுப்பாடுகள் வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில்கூட காங்கிரஸ் வேட்பாளராக, அமேதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அதில், வயநாடு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றார். ஒருவேளை இதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர், இரண்டு தொகுதிகளும் வெற்றிபெற்றால், ஏதாவது ஒரு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism