Published:Updated:

வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

நாங்குநேரி இடைத்தேர்தல்...

வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி!

நாங்குநேரி இடைத்தேர்தல்...

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நெல்லைக்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தைச் சூடாக்கியிருக்கிறது.

நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார், குமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படும் நிலையில், வெற்றியைக் கைப்பற்ற அ.தி.மு.க-வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அ.ம.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, மாவட்டச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கணேசன் ஆகியோர் அக்கட்சி யிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணையும் விழா ஜூலை 6-ம் தேதி தென்காசியில் நடைபெற் றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘நாங்கு நேரி சட்டமன்ற இடைத்தேர்தலில், மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தர நீங்கள் எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டுவதே இந்த இணைப்புக்குக் கிடைத்தப் பரிசாக இருக்கும்’’ என்றார்.

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாதபோதிலும் ஆளுங்கட்சி சார்பாக இப்போதே தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அ.தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகளால் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறை யாக ஜூலை 11-ம் தேதி மீண்டும் நெல்லைக்கு வருகை தந்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி!

அ.ம.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர், இரவில் தூத்துக்குடியில் தங்கினார். அப்போது இரு மாவட்டங்களையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதுடன் தேர்தல் யுக்திகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதித்துள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘இரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்த முதல்வர், ‘அ.ம.மு.க-வில் எஞ்சியிருக்கும் நிர்வாகிகளையும் அ.தி.மு.க-வில் இணைக்க நடவடிக்கை எடுங்கள். நாங்குநேரி தொகுதியில் வெற்றியைக் கைப்பற்றியாக வேண்டும். இப்போதே தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டு நிறைவேற்றுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார்’’ என்றனர்.

எதிர்த்தரப்பில், ‘தொகுதி யாருக்கு...’ என்ற முடிவு இன் னும் எட்டப்படாத நிலையில், தி.மு.க - காங்கிரஸ் என இரு கட்சியினருமே சீட்டுக்காக சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே நாங்குநேரியில் தேர்தல் ஜுரம் தொற்றிவிட்டது!