Published:Updated:

தேர்தல் 2021 : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

தேர்தல் 2021
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் 2021

எல்லோரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்குச்சாவடிக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக, வாக்குப்பதிவு நேரத்தையும் ஒரு மணி நேரம் கூடுதலாக்கியுள்ளனர்.

தேர்தல் 2021 : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

எல்லோரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்குச்சாவடிக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக, வாக்குப்பதிவு நேரத்தையும் ஒரு மணி நேரம் கூடுதலாக்கியுள்ளனர்.

Published:Updated:
தேர்தல் 2021
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் 2021
மிழகத்தின் அடுத்த ஐந்தாண்டுக் காலத் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேதி, ஏப்ரல் 6. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் 2021 மே 24-ம் தேதி வரை இருந்தாலும், யாருமே எதிர்பார்க்காதபடி ஏப்ரல் முதல் வாரத்திலேயே தேர்தல் நடக்கிறது. ‘`தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரித் தேர்தல்களை முடித்துக்கொண்டு மேற்கு வங்காளத் தேர்தலில் பா.ஜ.க கவனம் செலுத்த வசதியாகவே இப்படி முன்கூட்டியே இங்கு தேர்தல் நடக்கிறது’’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் முடிந்து 26 நாள்கள் கழித்து மே 2-ம் தேதிதான் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

கொரோனா காலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால், பல மாற்றங்கள் இம்முறை தேர்தலில் நடைமுறைக்கு வந்துள்ளன. அதேபோல, பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் சில விஷயங்களைக் கட்டாயம் ஆக்கியுள்ளன. அந்த விஷயங்கள் இங்கே...

கடந்த 2016 தேர்தலில் தமிழகத்தில் 66,007 வாக்குச்சாவடிகள் இருந்தன. இம்முறை இது 88,936 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வாக்காளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இப்படி அதிகரித்துள்ளனர்.

எல்லோரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்குச்சாவடிக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக, வாக்குப்பதிவு நேரத்தையும் ஒரு மணி நேரம் கூடுதலாக்கியுள்ளனர்.

வாக்களிக்கச் செல்வதற்கு முகக் கவசம் கட்டாயம். ஒருவேளை யாரேனும் முகக் கவசம் இல்லாமல் சென்றால், அவர்களுக்கு வழங்குவதற்காக அங்கு முகக் கவசங்கள் இருக்கும். வாசலிலேயே வெப்பநிலைப் பரிசோதனை செய்து, சானிட்டைசர் அளிக்கப்படும்.

யாருக்காவது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை நடக்கும். சந்தேகப்படும் அளவுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள், மற்ற எல்லோருடனும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் தனியாகச் சென்று வாக்களிக்கலாம்.

வழக்கமாகத் தேர்தல் பணி செய்பவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு போடும் வாய்ப்பு வழங்கப்படும். இப்போது மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், அத்தியாவசிய சேவைப்பணிகளில் இருப்பவர்கள், கொரோனா பாதிப்புக்கு ஆளாகித் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரும் தபால் ஓட்டு போடலாம். முன்கூட்டியே விண்ணப்பித்து இதற்கான படிவம் பெறவேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் தபால் ஓட்டு வாய்ப்பை வழங்க சமீபகாலமாக ஆலோசனைகள் நடைபெற்றன. ஆனால், இதுதொடர்பாக இன்னும் விரிவான விவாதம் நடத்த வேண்டியுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை கால அவகாசம் கேட்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியாது.

தேர்தல் 2021 : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

வேட்புமனு தாக்கல் செய்ய நேரில் போக வேண்டும் என்ற அவசியமில்லை. வேட்பாளர்கள் விரும்பினால், இம்முறை ஆன்லைனிலேயே வேட்புமனு தாக்கல் செய்யலாம். டெபாசிட் தொகையையும் ஆன்லைனில் செலுத்தலாம். நேரில் சென்று வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், தன்னுடன் இரண்டு பேரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.

பிரசாரத்துக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் சேர்த்து மொத்தமே ஐந்து பேர்தான் பிரசாரத்துக்குப் போக வேண்டும்.

வேட்பாளர்கள்மீது ஏதேனும் கிரிமினல் வழக்குகள் இருந்தால், அதுபற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம். பிரசாரக் காலத்துக்குள் மூன்று முறை இதுபற்றி வேட்பாளர்கள் தங்கள் செலவில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.

தேர்தல் விதிமீறல்கள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற தவறுகள் நடந்தால், அதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்களே நேரடியாகப் புகார் செய்யலாம். இதற்காக cVIGIL என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரத்துடன் இதில் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 100 நிமிடங்களுக்குள் பதில் தருவார்கள்.

தேர்தல் நேர சோதனைகளில், பணம் கொண்டு செல்லும் அப்பாவிகள் பலர் சிக்குகிறார்கள். எனவே, 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்கள், போதுமான ஆதாரங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். ஆன்லைன் பணப் பரிமாற்றம் மூலம் வாக்காளர்களை வசியம் செய்வதைத் தடுக்கவும் வழி செய்துள்ளது தேர்தல் ஆணையம். பெருந்தொகைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால், உடனே தேர்தல் ஆணையத்துக்கு வங்கிகள் தகவல் தந்துவிடும்.

வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய பூத் ஸ்லிப்பை ஒவ்வொரு வீட்டுக்கும் தேர்தல் அதிகாரிகளே வழங்குவார்கள். பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் இம்முறை பிரெய்லியிலும் இது வழங்கப்படும். இதுதவிர, தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக வழிகாட்டும் கையேடு ஒன்றையும் வீடுகளுக்கு வழங்குவார்கள். இந்தியிலும் ஆங்கிலத்திலும் இது இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism