Election bannerElection banner
Published:Updated:

Live Updates: `தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு; மே 2-ல் ரிசல்ட் !’ - சுனில் அரோரா #Election2021

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான லைவ் செய்திகளின் தொகுப்பு..!

26 Feb 2021 5 PM

தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல்!

தேர்தல்
தேர்தல்

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகும். கேரளாவில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 6 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் கேரளாவுடன் ஏப்ரல் 6 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகும்.

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் - மார்ச் 12

வேட்பு மனு மீதான பரிசீலனை - மார்ச் 20

வாக்குப்பதிவு - ஏப்ரல் 6

வேட்பு மனு திரும்பப்பெற கடைசிநாள்: மார்ச் 22

வாக்கு எண்ணிக்கை - மே 2

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல்
தேர்தல்
26 Feb 2021 5 PM

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதன் விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்!

சுனில் அரோரா
சுனில் அரோரா

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``தமிழகத்தில் அதிக தேர்தல் செலவுகள் நடைபெறும் என்பதால், முக்கியமான மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளைக் கருத்தில்கொண்டு தேர்தல் தேர்தல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அது பற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும். தமிழகத்தில் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 30.80 லட்சம் செலவு செய்ய அனுமதி. புதுச்சேரியில் தொகுதிக்கு ரூபாய் 22 லட்சம் செலவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது” என்றார்

26 Feb 2021 5 PM

வேட்பு மனுத்தாக்கல் செய்ய இரண்டு நபர்களுக்கு மட்டுமே அனுமதி!

சுனில் அரோரா
சுனில் அரோரா

தொடர்ந்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``வேட்பு மனுத்தாக்கலின்போது இரண்டு நபருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனுத்தாக்கலுக்கு வர அதிகபட்சம் இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது, வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பாதுகாப்பு மிக மிக முக்கியம் எனத் தேர்தல் ஆணையம் கருதுகிறது” என்றார்.

26 Feb 2021 4 PM

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் சவாலாக இருந்தது!

தேர்தல்
தேர்தல்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,``கொரோனா காலத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தியது மிகவும் சவாலாக இருந்தது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதற்கு முந்தைய தேர்தலைவிட அதிக அளவாக 57 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினோம். தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. எனினும், இது கட்டாயம் கிடையாது” என்றார்.

26 Feb 2021 4 PM

செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கும் பெரும்பங்கு இருக்கிறது!

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஐந்து மாநிலத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுவருகிறார்கள். செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``கொரோனா அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்தாலும்கூட சுகாதாரத்துறையின் அளப்பரிய பணிகள் மூலமாக பிரச்னைகளைத் தொடர்ந்து சமாளித்துவருகிறோம். தேர்தலைச் சுமுகமாக நடத்துவதில் செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கும் பெரும்பங்கு இருக்கிறது. கொரோனா காலம் என்பதால், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்துகிறோம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன” என்றார்.

26 Feb 2021 4 PM

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு..?

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் விரைவில் நடைபெறவிருக்கின்றன. இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அண்மையில் தனது ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. தொடர்ந்து டெல்லி திரும்பிய தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, தேர்தல் தேதிகளை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டது. இந்தநிலையில், இன்று மாலை 4:30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள். இந்தச் சந்திப்பில் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு