Election bannerElection banner
Published:Updated:

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! - சத்யபிரதா சாகு

வாக்கு எந்திரங்கள்
வாக்கு எந்திரங்கள்

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

06 Apr 2021 8 PM

தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

06 Apr 2021 7 PM

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப்பதிவு முடிவடைந்தது!

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, புதுச்சேரிக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் அஸ்ஸாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவும் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

06 Apr 2021 6 PM

திமுக எம்.பி கனிமொழி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைபெற்று வந்தார்.

இன்று வாக்குப்பதிவு நாள் என்பதால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களும் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கனிமொழி இன்று மாலை மருத்துவமனையில் இருந்து ஆம்ப்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்தார். முழுமையான பிபிஇ அணிந்திருந்தார் கனிமொழி. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தனது வாக்கினை அவர் பதிவு செய்தார்.

கொரானா கவச உடையுடன் வாக்களிக்க வந்த கனிமொழி இடம்:மயிலாப்பூர் வீடியோ:பா.காளிமுத்து

Posted by Vikatan EMagazine on Tuesday, April 6, 2021
06 Apr 2021 6 PM

மாலை 5 மணி நிலவரம்!

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. பொதுமக்கள் 6 மணிக்குப் பிறகும் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் இன்று மாலை 5.00 மணி நிலவரப்படி 76.03 சதவீத வாக்குக்கள் பதிவாகியுள்ளன.

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு

மாலை 6 மணி முதல் 7 மணி வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வரவழைக்கப்பட்டு பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்க உள்ளனர்.

06 Apr 2021 4 PM

மதியம் 3 மணி நிலவரம்!

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு

தமிழகத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73 சதவிகிதமும் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 41.58 சதவிகிதமும் பதிவாகி உள்ளது.

06 Apr 2021 2 PM

தி.மு.க.வுக்கு பட்டனை அழுத்தினால் பி.ஜே.பி.க்கு வாக்கு? - வாக்குப் பதிவு நிறுத்தம்!

விருதுநகர் வாக்குச்சாவடி எண் 139 ல் தி.மு.க.வுக்கு பட்டனை அழுத்தினால் பி.ஜே.பி.க்கு விழுவதாக வாக்காளர்கள் புகார் அளித்தனர். இதன் காரணமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

விருதுநகர் நீராவி தெருவை சேர்ந்த குணசேகரன் என்ற வாக்காளர் விருதுநகர் சத்திரிய பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்தார். அப்போது அவர் தான் (1) வது பட்டனை அமுக்கியதாகவும், இரண்டாவது பட்டனில் லைட் எரிந்தாகவும் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். உடன் வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.

விருதுநகர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வாக்குப்பதிவு செய்து சோதனை செய்து பார்க்கலாம் என்று கூறினார். இப்போது தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

06 Apr 2021 2 PM
புதுச்சேரியில் வாக்குப்பதிவு மையமாக மாறிய சினிமா தியேட்டர்
06 Apr 2021 2 PM

மதியம் ஒரு மணி நிலவரம்!

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குப்பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவிகிதமும் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29 சதவிகிதமும் பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை 37.16 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

06 Apr 2021 12 PM

காலை 11 மணி நிலவரம்!

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குப்பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33சதவிகிதமும் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 20.98 சதவிகிதமும் பதிவானது.

06 Apr 2021 11 AM

சிலுவம்பாளையத்தில் வாக்களித்த முதல்வர் பழனிசாமி!

தமிழக முதல்வரும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையம் தொடக்கநிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் வந்த முதல்வர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

06 Apr 2021 10 AM

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்களித்தார்!

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை, விராலிமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

06 Apr 2021 9 AM

காலை 9 மணி நிலவரம்!

தமிழகத்தில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20.23 சதவிகித வாக்குகளும், குறைந்த அளவாக திருநெல்வேலி மாவட்டத்தில் 9.98 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

06 Apr 2021 9 AM

வாக்களிக்க சைக்களில் வந்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்த வந்தார். வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வாக்களித்துவிட்டு திரும்பிச் செல்கையில் தனது காரில் சென்றுவிட்டார். முன்னதாக நடிகர் அஜித், ரஜினி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

06 Apr 2021 8 AM

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், காந்திநகர் டான் பாஸ்கோ பள்ளியில் வாக்களித்தார்,

06 Apr 2021 8 AM

பெரியகுளத்தில் குடும்பத்துடன் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்!

தேனி மாவட்டம், பெரியகுளத்திலுள்ள நர்சரி பள்ளியில், ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கைப் பதிவு செய்தார். உடன், அவரது தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி, இளையமகன் ஜெயபிரதீப், ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

வாக்களித்த பின்னர் பேட்டி அளித்த ஓ.பி.எஸ்., ``சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அனைத்து அ.தி.மு.க வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க., மூன்றாம் முறை ஆட்சி அமைக்கும்" என்றார்.

06 Apr 2021 8 AM

குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த திமுக தலைவர் ஸ்டாலின்!

06 Apr 2021 8 AM

கமல் வாக்களித்தார்

06 Apr 2021 7 AM

பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.

திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.

06 Apr 2021 7 AM
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்!
06 Apr 2021 7 AM

சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்! படங்கள்: வீ. சதீஷ் குமார்

06 Apr 2021 7 AM

நம் விரல்... நம் குரல்...

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு
06 Apr 2021 6 AM

நடிகர் அஜித் குமார் காலையிலே தனது வாக்கினை செலுத்துகிறார்

06 Apr 2021 6 AM

தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3,09,23,651 பேர் ஆண்கள், 3,19,39,112 பேர் பெண்கள், 7,192 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு

கடந்த சில வாரங்களாக அனல் பறந்த பிரசாரங்கள் நேற்று முந்தினம் முடிவுக்கு வந்த நிலையில் தேர்தலை நடத்தும் பணிகளில் அதிகாரிகள் நேற்று முழுமையாக ஈடுபட்டனர். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, புதுச்சேரிக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் அஸ்ஸாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு