Published:Updated:

ஈரோடு கிழக்கு: வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே களமிறங்கிய திமுக - வீதி வீதியாக வந்த அமைச்சர்கள்!

பிரசாரத்தைத் தொடங்கிய சு.முத்துசாமி, நேரு.

``தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் நலத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டுவருகிறோம். தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள மற்ற அமைச்சர்களும் வருவார்கள்.’’ - அமைச்சர் சு.முத்துசாமி

ஈரோடு கிழக்கு: வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே களமிறங்கிய திமுக - வீதி வீதியாக வந்த அமைச்சர்கள்!

``தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் நலத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டுவருகிறோம். தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள மற்ற அமைச்சர்களும் வருவார்கள்.’’ - அமைச்சர் சு.முத்துசாமி

Published:Updated:
பிரசாரத்தைத் தொடங்கிய சு.முத்துசாமி, நேரு.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இன்று முதல் ஈரோடு பெரியார் நகரிலிருந்து தேர்தல் பிரசாரத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடக்கிவைத்தார்.
பெரியார் நகரில் வீடு வீடாக தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர்கள் புடைசூழ பேனர்கள், தட்டிகள், கட்சிக் கொடிகளுடன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வாக்குகளைச் சேகரித்தனர்.

அவர்களுடன் சிறிது நேரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேருவும் வீடு வீடாகச் சென்று காங்கிரஸுக்கு வாக்குகளைச் சேகரித்தார். பெரியார் நகர், மரப்பாலம், பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர் பகுதிகளில் வாக்காளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரிடமும் அமைச்சர்கள் முத்துசாமி, நேரு உள்ளிட்டோர் வாக்குகளைச் சேகரித்தனர்.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம், ``ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்தபோது ஒட்டுமொத்தமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்குச் செலுத்துவதாக உறுதியளித்தனர். இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா பொதுமக்களுடன் நன்கு நெருங்கிப் பழகி, மக்கள் மனதைக் கவர்ந்தவராக இருந்து மக்கள் பணியாற்றியிருக்கிறார். அவர் மீதான அனுதாபம் தொகுதி முழுவதும் அலைபோல வீசுகிறது. அந்த அனுதாப அலை காங்கிரஸின் வெற்றிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸுக்குத்தான் வழங்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தை முதல்வரிடம் சொன்னேன். தோழமைக் கட்சிகளுடன் பேசி, பின்னர் கூறுவதாகக் கூறிய முதல்வர், தற்போது இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்திருக்கிறார். இந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் நலத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டுவருகிறோம். தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள மற்ற அமைச்சர்களும் வருவார்கள். தற்போது பூத் கமிட்டி சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

தி.மு.க அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறுவது எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டாகிவிட்டது. கொரோனா தொற்று பரவல் முடிந்த பிறகு கடும் நிதி நெருக்கடி இருந்தது. அதிலிருந்து மீண்டு இப்போதுதான் படிப்படியாகத் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். தேர்தலின்போது, ஈரோடு சிஎன்சி கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றுவோம் என்று கூறினோம். அதற்கான அரசாணையை வெளியிட்டு, பணிகள் முடிவடைந்து, ஆளுநருக்கு அனுப்பி, அங்கிருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகச் சென்றிருக்கிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வினர் திட்டத்தைப் பாதியில் நிறுத்திவிட்டனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், நிலத்தைக் கையகப்படுத்துவதில் பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இவை அனைத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொன்றாகச் சரிசெய்தோம். கடந்த 18-ம் தேதிகூட இந்தப் பிரச்னை தொடர்பாக விவசாயிகளை நேரில் சந்தித்து நான் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரச்னையைச் சரிசெய்தேன். இவ்வாறு இந்த அரசு தொடர்ந்து தீவிரமாக மக்கள் பணியாற்றிவருவதால், இந்த இடைத்தேர்தலில் அமோக ஆதரவுடன் எங்கள் கூட்டணி வெற்றிபெறும்” என்றார்.

நேரு
நேரு

அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
``அமைச்சர் முத்துசாமி தலைமையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்திருக்கிறோம்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளாக நகர்நலப் பணி எதுவும் நடைபெறவில்லை. இந்த ஒன்றரை ஆண்டில்தான் திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து, திமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெற செய்வார்கள்” என்று தெரிவித்தார்.