Gujarat Election Results Live: ``வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் ஆசீர்வதித்தனர்” - குஜராத் வெற்றி குறித்து பிரதமர் மோடி

இமாச்சலப் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான லைவ் அப்டேட்..!
``வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் ஆசீர்வதித்தனர்” - பிரதமர் மோடி
குஜராத் மாநிலத்தில் பாஜக இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது. இமாச்சலை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக பெரும்பான்மை கிடைக்காமல் ஆட்சியை இழந்திருக்கிறது.

குஜராத் வெற்றி குறித்து பிரதமர் மோடி, ``குஜராத்துக்கு நன்றி. இப்படிப்பட்ட அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் ஆசீர்வதித்தனர், அதே நேரத்தில் இந்த வேகம் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தனர். எனவே குஜராத்தின் ஜனசக்திக்கு நான் தலைவணங்குகிறேன்." - மோடி
குஜராத்தில் படுதோல்வி... மாநில பொறுப்பை ராஜினாமா செய்த கங்கிரஸ் தலைவர் ரகு ஷர்மா!

காங்கிரஸுக்கு செக் வைத்த ஆம் ஆத்மி..!



இமாச்சலில் கடும் போட்டி... குஜராத்தில் பாஜக..! - முன்னணி நிலவரம்!
குஜராத், இமாச்சல் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இமாச்சல் மாநிலத்தில் பாஜக-வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சி அமைக்கத் தேவையான 35 இடங்களுக்கு இரு கட்சிகளுமிடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரம்...
பாஜக - 27
காங்கிரஸ் - 38
ஆம் ஆத்மி - 0
பிற - 3

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 182 இடங்களில் 150-க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களிலும், ஆம் ஆத்மி 09 இடங்களிலும் முன்னிலை.
குஜராத் & இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் LIVE
இமாச்சலில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும்போட்டி

இமாச்சலில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும்போட்டி நிலவிவருகிறது.
இமாச்சலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை..!

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் இமாச்சலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது
பாஜக முன்னிலை..!

இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருக்கிறது!
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..!

இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது தொடங்கியிருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்! இரு மாநில வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜக Vs ஆம் ஆத்மி Vs காங்கிரஸ்
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 1-ம் தேதி குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த நிலையில், டிசம்பர் 5-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் வெற்றிபெற மும்முரமாகச் செயல்பட்டன. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் வரும் 8-ம் தேதி (நாளை) ஒன்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருப்பதால், எந்தக் கட்சி, எங்கு ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் தொற்றிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

இமாச்சலப் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து அப்டேட்களையும் இந்த லைவ் அப்டேட்டில் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்..!
லைவ் அப்டேட்ஸ்:
- ஶ்ரீகணேஷ்.எம்.எல்.
- பி.ரஞ்சித்குமார்