கடலூர் மாநகராட்சித் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையின் (Strong Room) சாவி இல்லாத காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் அமைக்கப்பட்ட 152 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பெட்டிகள் கடலூர் மாநகராட்சியின் வாக்கு எண்ணும் மையமான செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகின்றன.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படவேண்டிய வாக்கு எண்ணிக்கை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையின் (Strong Room) சாவி இல்லாததால் தாமதமானது. அதனால் கடலூரில் மாநகராட்சித் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையின் சாவியைத் தேடிவந்த அதிகாரிகள் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, பூட்டை அறுத்து அறையைத் திறந்தனர். அதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாக 8:35 மணிக்குத் தொடங்கியது. தற்போது, அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.