Published:Updated:

`ஏலம் இல்லை; மிரட்டல் இல்லை!' - உள்ளாட்சி நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வுசெய்த தஞ்சை கிராமம்

வன்னிப்பட்டு
News
வன்னிப்பட்டு

சமூக அக்கறையுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவங்க, ஊராட்சித் தலைவரா வரணும்கிற நல்ல நோக்கத்துல, தினகரனை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தோம். வேற யாரும் போட்டியிடலை.

தமிழ்நாட்டில் வேறு எங்கும் இதுபோல் ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஊரில் ஏதேனும் ஒருசில பதவிகளுக்கு வேண்டுமானால் போட்டியின்றி சிலர் தேர்வுசெய்யப்பட்டிருக்கலாம். அவற்றில்கூட, ஏலம் மூலமாகவோ மிரட்டலுக்குப் பணிந்தோ நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோல் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமலேயே, தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்... ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருமே போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பல்வேறு கட்சிகள், சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம்விட, தங்களது ஊரின் வளர்ச்சியே முக்கியம் எனக் கருதி, இங்குள்ள மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இதற்கான பின்னணி நெகிழ்ச்சியானது.

சந்திரகுமார்
சந்திரகுமார்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமம், வன்னிப்பட்டு. இங்குதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. ஊரின் அமைதியையும் ஒற்றுமையையும் பேணிப் பாதுகாப்பதற்காகவும், பொதுக் காரியங்களில் ஏற்கெனவே ஈடுபட்டுவருபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், இங்குள்ள மக்கள் இந்த வினோதத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கு முயற்சி எடுத்தவர்களில் ஒருவரான சி.சந்திரகுமாரிடம் பேசினோம். ``எங்க ஊர் மக்கள் ரொம்ப அன்பானவங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் பெருசா சொல்லிக்கிற அளவுக்கெல்லாம் பகை இருக்காது. ஆனால், தேர்தல்னு வந்துட்டா, மன வருத்தங்கள் அதிகமாகிடுது. விஷேசங்கள், துக்க காரியங்கள்கூட ஒருத்தருக்கு ஒருத்தர் கலந்துக்காத அளவுக்கு அது வெளிப்பட ஆரம்பிச்சிடுது. தேர்தல்ல நிக்கிறவங்க, போட்டிபோட்டுக்கிட்டு செலவுபண்ணி கடனாளியாகவும் ஆகிப்போறாங்க. இதையெல்லாம் நினைச்சி, ஊர்மக்கள் எல்லாருமே கவலைப்பட்டுக்கிட்டு இருந்தோம்.

அதனால்தான், உள்ளாட்சித் தேர்தல்ல, எல்லாப் பதவிகளுக்குமே போட்டியில்லாம ஒருமனதாக ஆள்களைத் தேர்வுசெய்ய முடிவுசெஞ்சோம். இதுக்கு, எல்லாருமே ஒத்துழைச்சாங்க. கட்சி, சாதிப் பாகுபாடெல்லாம் பார்க்கல. ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம்ங்கிற கேள்வி வந்தப்ப, கஜா புயல் ஞாபகம் வந்துச்சி. புயல் அடிச்சி, குடிக்கக்கூட தண்ணீர் இல்லாம ஊர் மக்கள் அவதிப்பட்டப்ப, எங்க ஊரைச் சேர்ந்த தினகரன், தன் சொந்தச் செலவுல ஜெனரேட்டர் வச்சி எல்லாருக்கும் தண்ணீர் கொடுத்தார். அதுமட்டுமில்லாம, அழிவின் விளிப்புல இருந்த எங்க ஊர் பள்ளிக்கூடத்தை, இவரோட அண்ணன் ராமச்சந்திரன் தத்தெடுத்து புத்துயிர் கொடுத்தார். அதுக்கு, பல லட்சம் ரூபாய் செலவு பண்ணிக்கிட்டு இருக்கார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூக அக்கறையுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவங்க, ஊராட்சித் தலைவரா வரணுங்கிற நல்ல நோக்கத்துல, தினகரனைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தோம். வேற யாரும் போட்டியிடலை. பொதுக் காரியங்கள்ல ஆர்வமுள்ள 6 நபர்களை, ஊராட்சிமன்ற உறுப்பினர்களாக, அந்தந்த வார்டு மக்களே முடிவு செஞ்சிட்டாங்க.

எங்க ஊர் மக்கள் ரொம்ப அன்பானவங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் பெருசா சொல்லிக்கிற அளவுக்கெல்லாம் பகை இருக்காது. ஆனா தேர்தல்னு வந்துட்டா, மன வருத்தங்கள் அதிகமாகிடுது.

தேர்தல் அன்னைக்கு, எங்க ஊர் அமைதிப்பூங்காகவா இருக்கும்” என நெகிழ்ச்சியோடு பேசினார். வன்னிப்பட்டு மக்களின் சாதுர்யத்தாலும் பெருந்தன்மையினாலும், தேர்தல் பகை விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு நல்லது செய்தால், பதவி தானாகத் தேடிவரும் என்ற நிலையை உருவாக்கியுள்ள வன்னிப்பட்டுக்கு ஒரு சல்யூட்!