Published:Updated:

அரசியலில் சமூக ஊடகங்களின் தலையீட்டைத் தடுப்பது சாத்தியமா? - சோனியா கொந்தளிப்பும் யதார்த்த நிலையும்!

சமூக ஊடகம் - சோனியா காந்தி

சமூக வலைதளங்கள் பாஜக-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலில் சமூக ஊடகங்களின் தலையீட்டைத் தடுப்பது சாத்தியமா? - சோனியா கொந்தளிப்பும் யதார்த்த நிலையும்!

சமூக வலைதளங்கள் பாஜக-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
சமூக ஊடகம் - சோனியா காந்தி

சோனியா காந்தி குற்றச்சாட்டு:

மக்களவையில் ஜீரோ ஹவர் நேரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ``மற்ற கட்சிகளைவிட, தேர்தல் விளம்பரங்களில் ஆளும் பாஜக அரசுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. ஃபேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்கள் அரசுடன் முறையற்ற தொடர்புகொண்டிருப்பதை இது குறிக்கிறது. ஃபேஸ்புக் மூலம் பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தேர்தல் விதிக்குப் புறம்பானது" என்று பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

தொடர்ந்து பேசியவர், ``ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தவறாகப் பயன்படுத்திவருவதால் ஆபத்து அதிகரிக்கிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான விளம்பரங்களின் மூலம் இளைஞர்களின் மத்தியில் தவறான வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. இதன் காரணமாக சமூக அமைதி கெடுகிறது. சமூக வலைதளங்கள் நமது ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முயல்வது பெரும் அபாயம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செய்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும். நமது தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும்விதமாக, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் இது போன்ற செயல்பாடுகளைத் தடுக்க வேண்டும்" என்று பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்ச்சை:

டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார். ராகுல் காந்தி அந்தச் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களைப் பொதுவெளியில் வெளியிட்டிருப்பது, போக்சோ சட்டத்தின்படி குற்றம் எனக் கூறி 'தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம்' புகார் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி உட்பட பலரின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி

இதற்கு ராகுல் காந்தி ``என் ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம், அந்த நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் வியாபாரம் செய்வதற்கு எங்கள் அரசியலை வரையறுக்கிறது. ஓர் அரசியல் தலைவராக இதை நான் விரும்பவில்லை. இதை இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்" என்று காட்டமாகவே கூறியிருந்தார். மேலும், அவர் சமீபத்தில்கூட பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரின் ட்விட்டர் கணக்கை ஒப்பிட்டுப் பார்க்கையில் தனது ட்விட்டர் வரம்பு குறைவாக இருப்பதாகப் புகார் கூறியிருந்தார். இந்தப் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூக வலைதளமும் அரசியலும்:

எல்லாமே இணையதளம் என்று ஆன காலகட்டத்தில் சமூக வலைதளம் அனைவரின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள் முதல் பெரும் பிரபலங்கள் வரை அனைவருமே தங்களின் சுயவிவரம் முதல் தங்களின் செயல்பாடுகளை இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும்தான் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார்கள். தமிழகம் தொடங்கி இந்தியாவின் பெரிய கட்சிகள் பலவும், தங்களின் அதிகாரபூர்வ அறிவிப்புகளையே ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும்தான் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

பாஜக சமூக வலைதளம்
பாஜக சமூக வலைதளம்

இந்தியாவில் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை, கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில்தான் சமூக வலைதளங்களின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் கடந்த 2019-ம் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் களத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு ஓர் அங்கமாகவே மாறவிட்டது என்று சொல்லலாம். அந்தத் தேர்தலில் மட்டும் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்குச் செலவு செய்த தொகை 42.3 கோடி ரூபாய். இதில் பாஜக மட்டும் 25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சி செலவு செய்தது வெறும் 1.42 கோடி ரூபாய் மட்டுமே.

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில்கூட சமூக வலைதளங்கள் பைடனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி, சர்வதேச அளவில் சமூக வலைதளங்கள் ஆளும் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டைக்கூட அதே சமூக வலைதளங்களின் வாயிலாகத்தான் முன்வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அரசியல் களத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு என்பது தவிர்க்கவே முடியாதது என்பதுதான் உண்மை நிலவரம். என்றாலும், அரசியல் கட்சிகள் அவற்றைப் பயன்படுத்துவதில் தேர்தல் ஆணையம் சில வரைமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism