Published:Updated:

உ.பி. : பாஜக, சமாஜ்வாடிக்கு டஃப் கொடுக்கும் காங்கிரஸ்... முதல்வர் வேட்பாளராகிறாரா பிரியங்கா காந்தி?

பிரியங்கா காந்தி

``உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக்கூடிய வேறு யாருடைய முகமாவது உங்களுக்கு தென்படுகிறதா... பிறகென்ன..?" - பிரியங்கா காந்தி.

உ.பி. : பாஜக, சமாஜ்வாடிக்கு டஃப் கொடுக்கும் காங்கிரஸ்... முதல்வர் வேட்பாளராகிறாரா பிரியங்கா காந்தி?

``உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக்கூடிய வேறு யாருடைய முகமாவது உங்களுக்கு தென்படுகிறதா... பிறகென்ன..?" - பிரியங்கா காந்தி.

Published:Updated:
பிரியங்கா காந்தி

தேதி அறிவிக்கப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேர்தல் களம் உச்சத்தில் இருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றன. சாதி, மதம், கட்சி, வாக்குறுதிகள்போல முதல்வர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுகிறார் என்பதும் தேர்தல் வெற்றிக்கு முக்கிய அம்சமாக நடைமுறையில் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதை உறுதிசெய்யும் வகையில் பிரியங்கா காந்தியின் சமீபத்திய பேச்சுகளும் இடம்பெற்றிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உத்தரப்பிரதேசத்தில்  பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக, அதிக எண்ணிக்கையில் தொகுதிகளைக்கொண்ட மாநிலமாக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் தேசிய மற்றும் அந்த மாநிலக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தலில் களம் இறங்கியிருக்கின்றன. குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அதேபோல், ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க-வும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுவருகிறது

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் விட்ட கோட்டையை இந்தமுறை எப்படியேனும் கைப்பற்றிவிடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு முழுவதுமாகக் களத்தில் இறங்கியிருக்கிறது. இதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் தலைமை, உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தியை நியமித்தது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Twitter /@INCUttarPradesh

ஏற்கெனவே, கடந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நிகழவில்லை. அதேசமயம் காங்கிரஸ் கட்சியும் எதிர்பாராதவிதத்தில் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வென்று, படுதோல்வி அடைந்திருந்தது. இந்த முறை சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் தலைமை, உறுதியாக ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக முன்கூட்டியே மக்கள் மத்தியில் பிரியங்கா காந்தியை உலவவிட்டது. விவசாயிகள் போராட்டம், உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை என அனைத்துப் பிரச்னைகளிலும் பாதிகப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய மாநில பாஜக அரசுக்கு எதிராகவும் போராட்டங்களில் பங்கெடுத்தார். அதைத் தொடர்ந்து, தற்போது தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பிரியங்கா காந்தியே காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை உறுதிசெய்யும் வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் சகோதரர் ராகுல் காந்தியுடன் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி அதற்கான மறைமுக பதிலையும் வெளியிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி

அந்த நிகழ்வில் பத்திரிகையாளர் ஒருவர் `காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்?’ எனக் கேள்வி எழுப்பவும் அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, ``உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக்கூடிய வேறு யாருடைய முகமாவது உங்களுக்குத் தென்படுகிறதா... பிறகென்ன..?" எனப் புன்னகையுடன் பதிலளித்தார். மேலும், ``இங்கு ஒவ்வோர் இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதை நீங்கள் காணலாம்'' எனவும் சூசகமாக பதிலளித்தார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இதன் மூலம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக நிச்சயம் பிரியாங்கா காந்தியே நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர். மேலும், தேர்தலில் 40% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறியிருந்தது, தேர்தல் அறிக்கையில் உத்தரப்பிரதேசத்தில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், அவற்றில் எட்டு லட்சம் வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது எனத் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரியங்கா காந்தியின் அறிவிப்புகளும் அவரே முதல்வர் வேட்பாளர் என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறது.

ஆனால், இது குறித்து காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில், தற்போது பிரியாங்கா காந்தி பேசியிருக்கும் மற்றொரு கருத்தும் கவனம்பெற்றிருக்கிறது.

பிரியங்கா காந்தி, காங்கிரஸ்
பிரியங்கா காந்தி, காங்கிரஸ்

அதாவது, ``உத்தரப்பிரதேசத் தேர்தலில் நான் போட்டியிட்டாலும், முதல்வர் வேட்பாளராக என்னைக் கருத முடியாது! அடிக்கடி முதல்வர் வேட்பாளர் குறித்துக் கேள்வி கேட்கும்போது, இயல்பான முறையில் நான் பேசியதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உத்தரப்பிரதேச காங்கிரஸில் பல தலைவர்கள் உள்ளனர். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவு முறைப்படி அறிவிக்கப்படும். அதேசமயம், நான் தேர்தலில் போட்டியிட்டாலும், முதல்வர் வேட்பாளராக அதைக் கருதக் கூடாது" என விளக்கம் அளித்திருக்கிறார்.

கட்சித் தலைமையின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism