Published:Updated:

காஞ்சிபுரம்: ஆளுக்கொரு வழியில் தலைமையை நெருங்கும் கவுன்சிலர்கள்! -பரபரக்கும் மேயர், துணை மேயர் ரேஸ்

காஞ்சிபுரம் மேயர் ரேஸ்

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியைப் பிடிப்பதில் பலரும், பல்வேறு வகையில் காய்நகர்த்திவருகிறார்கள்.

காஞ்சிபுரம்: ஆளுக்கொரு வழியில் தலைமையை நெருங்கும் கவுன்சிலர்கள்! -பரபரக்கும் மேயர், துணை மேயர் ரேஸ்

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியைப் பிடிப்பதில் பலரும், பல்வேறு வகையில் காய்நகர்த்திவருகிறார்கள்.

Published:Updated:
காஞ்சிபுரம் மேயர் ரேஸ்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது பட்டு. பல்வேறு புராதன கோயில்களைக்கொண்ட மிகவும் தொன்மையான நகரம். பேரறிஞர் அண்ணா பிறந்ததும் காஞ்சியில்தான். கடந்த 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம் பெருநகராட்சி அந்தஸ்தைப் பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் திமுக ஆட்சியில்தான் காஞ்சிபுரம் பெருநகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள். இவற்றில் ஆண் வாக்காளர்கள் 1,05,668 பேர். பெண் வாக்காளர்கள் 1,13,205 பேர். திருநங்கை வாக்காளர்கள் 28 பேர் என மொத்தம் 2,18,901 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியாக மாறிய பின்பு காஞ்சிபுரம் சந்திக்கும் முதல் மேயர் தேர்தல் இது. மேலும், இந்த மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் முதல் மேயர் பதவி என்பதால் போட்டி மிகவும் கடுமையாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொத்தமுள்ள 51 வார்டுகளில் ஒரு வார்டில் மட்டும் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால், அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகளில், திமுக 31 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஓர் இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

பெரும்பான்மை இருந்தும், வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர்களை ஒரு பாதுகாப்புக்காகத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை தி.மு.க-வினர் செய்துவருகிறார்கள். மேயர் ரேஸில் இருப்பவர்கள் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு வைட்டமின் `ப’வை தாராளமாக இறக்குகிறார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேயர் ரேஸில் யார் யார்?

தி.மு.க சார்பில் மேயர் பதவியைப் பிடிக்கக் கட்சியில் பலம் படைத்த பலரும் காய்நகர்த்திவருகிறார்கள். அதே சமயம் துணை மேயர் பதவியைப் பிடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது. இது குறித்து காஞ்சிபுரம் தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "மேயருக்கான ரேஸில் தி.மு.க-வின் மாநில வர்த்தக அணிச் செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் மனைவி மல்லிகா, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சோபன் குமாரின் மனைவி டாக்டர் சூர்யா.

முன்னாள் நகர் மன்றத் தலைவர் சன் பிராண்ட் ஆறுமுகத்தின் மகள் சசிகலா, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜின் மனைவி மகாலட்சுமி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் சி.வி.எம்.ஏ.சேகரன் மனைவி விமலாதேவி, தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன் மனைவி சாந்தி ஆகியோர் முன்னணியில் இருக்கிறார்கள்.

இதில், வி.எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் சோபன் குமார் இருவருமே காஞ்சிபுரத்தில் பண பலம் மற்றும் கட்சி செல்வாக்கு அதிகமாக உள்ளவர்கள். இருவருமே எப்படியாவது தங்களின் மனைவிக்கு மேயர் பதவியை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று ஆளாளுக்கு ஒருபக்கம் காய்நகர்த்திவருகிறார்கள். அதேசமயம் சன் பிராண்ட் ஆறுமுகம் தனது மகளுக்காகத் தலைமைக்கு நெருக்கமானவர்களின் மூலம் பேசிவருகிறார்.

அண்ணா காலம் தொட்டு சி.வி.எம்.ஏ.சேகரனின் மொத்த குடும்பமும் தி.மு.க-வில் இருக்கிறது. அவரும் தன் மனைவி விமலாதேவிக்காகக் கட்சித் தலைமையிடம் பேசிவருகிறார். ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த சி.வி.எம்.பி.எழிலரசன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். ஏற்கெனவே, அவர் குடும்பத்தில் ஒருவர் மாவட்டத்தில் பதவியில் இருப்பதாலும், அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரத்தில் பல்வேறு பதவிகளில் இருப்பதாலும், மேயர் பதவியை சேகரனின் மனைவிக்கு ஒதுக்க கட்சித் தலைமை யோசித்துவருகிறது. இதனால், 'துணை மேயர் பதவியாவது கொடுங்கள்' என தலைமையிடம் முட்டி மோதுகிறார் சேகரன்" என்றனர்

இவர்கள் அனைவரும் ஆளுக்கொரு வகையில், தலைமையிடம் காய்நகர்த்திவந்தாலும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் க.சுந்தர் எம்.எல்.ஏ இருவரும் டிக் செய்யும் நபருக்குத்தான் மேயர் மற்றும் துணை மேயர் பதவி என்கிறார்கள் விவரமறிந்த காஞ்சிபுரம் தி.மு.க வட்டாரத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism