கன்னியாகுமரி எம்.பி-யாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்ததை அடுத்து, ஏப்ரல் 6-ம் தேதியன்று தமிழக சட்டசபைத் தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணனும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்தும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இறுதிக்கட்ட கள நிலவரம் என்ன சொல்கிறது?

இது பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் 9-வது நாடாளுமன்றத் தேர்தல். இதற்கு முன்பு எட்டு முறை போட்டியிட்ட அவர் இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறார். 1999-ல் தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் டென்னிஸ், த.மா.கா-வின் குமாரதாஸ் ஆகியோர் போட்டியிட்டார்கள். வலுவான மும்முனைப் போட்டி நிலவியதால் எதிரணி ஓட்டுகள் பிரிந்தன. பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். 2014-ல் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்ட சமயத்தில், எதிரணி வாக்குகள் பிரிந்ததால் வெற்றிபெற்றார். மற்ற சமயங்களில் இருமுனைப் போட்டி நிலவியதால், அவை பொன்னாருக்குப் பாதகமாகவே அமைந்துள்ளன.

இம்முறை நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், விஜய் வசந்துக்கும் இடையேதான் போட்டி. மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும்போதே நடக்கும் இடைத்தேர்தல் என்பது மட்டுமே இந்தத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனுக்குச் சாதகமாக உள்ளது. பா.ஜ.க வெற்றிபெற்றால் அவர் மத்திய அமைச்சராகிவிடுவார். மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெறும் என்ற பா.ஜ.க-வின் பிரசாரம் மக்களிடம் எடுபட்டிருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில், சரக்குப் பெட்டக மாற்று முனைய துறைமுக விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியிருக்கிறது. கடந்த 2019 தேர்தலில் துறைமுகம் விவகாரம்தான் பொன்னாரைச் சாய்த்தது. எனவே, கன்னியாகுமரியில் துறைமுகம் வராது என அவரே கூறிவருகிறார். பிரசாரத்துக்காக மார்ச் 27-ம் தேதி நாகர்கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் “துறைமுகம் வராது” என ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார். ஆனால், காலையில் முதல்வர் பிரசாரம் செய்துவிட்டுச் சென்ற அன்று மாலையிலேயே துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடற்கரையில் போராட்டம் நடத்தினார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வரின் துறைமுகம் குறித்த அறிவிப்புகளை நம்ப மறுக்கிறார்கள் மீனவர்கள்.

‘‘துறைமுகம் வராது என்று ஏற்கெனவே கூறப்பட்டுவிட்டது. எனினும், போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். வாதத்துக்கு மருந்து உண்டு. ஆனால், விதண்டாவாதத்துக்கு மருந்து கிடையாது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் எப்படிப் பொய்களைக் கூறி வென்றார்களோ, அதே ஆயுதத்தை, அதுவும் துருப்பிடித்த ஆயுதத்தை இப்போதும் பயன்படுத்திவருகிறார்கள். துறைமுகம் வராது என்று முதல்வர் கூறிவிட்டார். நானும் பலமுறை எடுத்துக் கூறிவிட்டேன். இதற்கு மேல் நான் விளக்கிச் சொல்ல முடியாது’’ என்று வருத்தத்துடன் கூறுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆனால் விஜய் வசந்தோ ‘‘பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் தேர்தல் சமயத்துக்காக ‘துறைமுகம் வராது’ என்று சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். சரக்குப் பெட்டகத் துறைமுகம் வரக் கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். வரவும் விடமாட்டோம். மத்திய அமைச்சராகித்தான் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாங்கள் மக்களோடு மக்களாக நின்று போராடிக்கூட மத்திய அரசிடமிருந்து திட்டங்களை வாங்கிக் கொடுப்போம்” எனப் பிரசாரங்களில் பேசி, துறைமுக விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் விஜய் வசந்த்.

துறைமுக எதிர்ப்பாளர்களின் போராட்டம், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. வசந்தகுமார் மறைந்த பின்னர் கட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குறுகியகாலத்தில் மக்கள் மத்தியில் அறிமுகமானவராக மாறிவிட்டார் விஜய் வசந்த். முதல் தேர்தலிலேயே சீனியர் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு விஜய் வசந்துக்குக் கிடைத்திருக்கிறது. துறைமுக விவகாரத்தில் மீனவர் வாக்குகளும், பா.ஜ.க-வுக்கு எதிரான சிறுபான்மையினர் வாக்குகளும் விஜய் வசந்துக்குச் செல்லும் நிலை இருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணனும் விஜய் வசந்தும் இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வாக்குகள் இருவருக்கும் பிரிந்து விழும் சூழல் நிலவுகிறது. கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சல் சட்டமன்றத் தொகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம். எனவே, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால்தான் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற முடியும். விஜய் வசந்தின் சொந்த ஊர் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் என்பதால், அந்தப் பகுதி மக்களின் ஓட்டுகள் விஜய் வசந்துக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே, கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் விஜய் வசந்த் கையே ஓங்குகிறது!