Published:Updated:

Live: ``காங்கிரஸ் கட்சி பிடிக்கும், அதனால்...” - கர்நாடகாவில் ட்விஸ்ட் அடித்த மஜத கட்சி எம்.எல்.ஏ!

ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி
Live Update
ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி சீட்டுகளுக்கான தேர்தல் தொடங்கியது.

10 Jun 2022 12 PM

கர்நாடகாவில் ட்விஸ்ட்..!

நான்கு மாநிலங்களில், 16 மாநிலங்களவை எம்.பி சீட்டுகளுக்கான தேர்தல் இன்று காலை முதல் நடந்துவரும் நிலையில், கர்நாடகாவில் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கே.ஸ்ரீனிவாச கவுடா என்பவர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை எம்.பி சீட்டுகளுக்கு நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், ம.ஜ.த கட்சி சார்பாக ஒருவர் மட்டுமே போட்டியிட்டார்.

இந்த நிலையில், ம.ஜ.த எம்.எல்.ஏ கே.ஸ்ரீனிவாச கவுடா இவ்வாறு கட்சி மாறி வாக்களித்திருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ கே.ஸ்ரீனிவாச கவுடா, ``காங்கிரஸ் கட்சி பிடிக்கும், அதனால், அந்தக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், ம.ஜ.த கட்சியின் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ``காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தொடர்புகொண்டு குதிரைப் பேரம் பேசினார்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

10 Jun 2022 9 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4 மாநிலங்கள்; 16 இடங்கள்

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி சீட்டுகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. ஏற்கெனவே, தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 பேர் எம்.பி-யாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தத் தேர்தல் தொடங்கியுள்ளது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்தத் தேர்தலில், 16 மாநிலங்களவை எம்.பி சீட்டுகளுக்கு மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆறு இடங்களில், பா.ஜ.க-வுக்கு இரண்டு இடமும், காங்கிரஸ், சிவசேனா கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு தலா ஓர் இடமும் உறுதியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. எஞ்சியுள்ள ஓர் இடத்துக்கு மட்டுமே போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

4 மாநில மாநிலங்களவைத் தேர்தல்
4 மாநில மாநிலங்களவைத் தேர்தல்

மேலும், கர்நாடகாவில் உள்ள நான்கு இடங்களுக்கு பா.ஜ.க-விலிருந்து மூன்று பேரும், காங்கிரஸிலிருந்து இரண்டு பேரும், ம.ஜ.த-விலிருந்து ஒருவரும் போட்டியிடுகின்றனர். அதேபோல் ராஜஸ்தானில் நான்கு எம்.பி சீட்களுக்கு, காங்கிரஸ் சார்பாக மூன்று பேர், பா.ஜ.க சார்பாக ஒருவர் மற்றும் பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாக ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். ஹரியானாவில், இரண்டு எம்.பி சீட்டுகளுக்கு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-விலிருந்து தலா ஒருவரும், பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாக ஒருவரும் என மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் எந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கலாம் என்பதால் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism