Published:Updated:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது! | Live Updates

உள்ளாட்சித் தேர்தல்
Live Update
உள்ளாட்சித் தேர்தல்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அது தொடர்பான முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

19 Feb 2022 6 PM

மதுரை: அதிக கள்ள வாக்குகள்... மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் அலுவலர் பரிந்துரை!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் அதிகமான கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

19 Feb 2022 6 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது! 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல்வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
19 Feb 2022 3 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஹிஜாப்பை அகற்றச் சொல்லுவதா..?!’ -  கனிமொழி காட்டம்

திமுக எம்.பி கனிமொழி, மதுரையில் நடந்த ஹிஜாப் விவகாரம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார். அவர், ``மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

19 Feb 2022 3 PM

``அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கூடிய 16 நபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்”

சென்னை வேளச்சேரி 176-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மூர்த்தி. இவருக்கு ஆதரவாக செயல்படுவதற்காக வார்டுக்கு தொடர்பில்லாத 16 நபர்கள் ஒரே போல உடையணிந்து அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வேளச்சேரி போலீஸார் ஏஜிஎஸ் காலனி பகுதியில் இருந்த 16 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் 16 பேரும் பெரும்பாக்கம் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து 16 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- அழகு சுப்பையா

19 Feb 2022 3 PM

`பாதுகாப்புப் பணிக்கு காவல்துறையினரை நியமிக்கவில்லை!’

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது! | Live Updates

இராயபுரத்தில் 49-வது வார்டு, மாடல் ஹை ஸ்கூலில் தி.மு.க வக்கீல் அணி என்று சொல்லிக்கொண்டு, வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் நோக்கில் வந்ததாக, அங்கு அ.தி.மு.கவினர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் பாதுகாப்புப் பணிக்கும் காவல்துறையினரை நியமிக்காமல் ஊர்க்காவல் படையினர் மட்டுமே பாதுகாப்புக்கு அமர வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. உடனே அ.தி.மு.கவினர் இதுகுறித்துப் புகார் எழுப்ப, தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஸ்பாட்டுக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் காவலுக்கு தனியே எஸ்.ஐ ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்போது அங்கு பெரிய கேட்கள் அனைத்தும் மூடப்பட்டு சிறிய கேட் வழியாக மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

- செந்தில் கரிகாலன்

19 Feb 2022 3 PM

`வாக்குச்சாவடியை தி.மு.க-வினர் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்’ - அதிமுக-வினர்

சென்னை மாநகராட்சி 117-வது வார்டு வாக்குப்பதிவு தேனாம்பேட்டையில் உள்ள கேசரி மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இன்று காலை 12 மணியளவில் இரண்டு பெரிய தனியார் ஆம்னி பேருந்துகள் வாக்குச்சாவடிப் பக்கம் வந்து நின்றன. அதில், தி.மு.க அடையாளத்துடன் திருமண போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. ஒரு பேருந்தில் முழுவதும் ஆட்கள் இருந்தனர். அதிமுக வேட்பாளர் ஆறுமுகம்(எ) சின்னையா உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். பின்னர், அ.தி.மு.க தொண்டர்கள் சிலர் பேருந்துக்கு அருகில் சென்றதும் பேருந்து அங்கிருந்து நகர்ந்தது. வாக்குச்சாவடியை தி.மு.க-வினர் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டிய அ.தி.மு.க-வினர் உன்னிப்பாக வாக்குச்சாவடியை கண்காணித்து வருகின்றனர்.

- செந்தில் கரிகாலன்

19 Feb 2022 1 PM

வாக்குச் சாவடியில் ஹிஜாபை கழற்றச் சொன்ன பாஜக முகவரிடம் போலீஸார் விசாரணை!

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்ணிடம் ஹிஜாபைக் கழற்றச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பிய பாஜக முகவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், மதுரை போலீஸார் வாக்குச்சாவடியில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்ட பாஜக முகவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

19 Feb 2022 12 PM

``ஜெயலலிதா இல்லாமல் முதன்முறையாக வாக்களிப்பது கஷ்டமாக இருக்கிறது!" - சசிகலா உருக்கம்

சசிகலா சென்னை தியாகராய நகர், வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். சென்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதனால், அவர் அப்போது வாக்களிக்கவில்லை.

சசிகலா
சசிகலா
சசிகலா
சசிகலா

இந்த நிலையில், இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சசிகலா சென்னை தியாகராய நகர், வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். ஜெயலலிதா இல்லாமல் முதன்முறையாக வாக்களிப்பது கஷ்டமான சூழல்" என்றார்.

19 Feb 2022 11 AM

சென்னை: மந்தகதியில் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையர் விளக்கம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மதுரை, ராமநாதபுரம், கோவை எனப் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு சற்றே மந்தமாக நடைபெற்றுவருகிறது.

மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்
மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

அது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ``சென்னையில் இனிமேல்தான் வாக்குப்பதிவு சூடுபிடிக்கும். ஆறு இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் நடைபெறவில்லை. 30 முதல் 40 மின்னணு இயந்திரங்கள் வரை பழுதடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பணப் பட்டுவாடா நடந்ததாக 17 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களால் வாக்குப்பதிவு தாமதமான இடங்களுக்கு கூடுதல் நேரம் வழங்கும் திட்டமில்லை. மாலை 5 மணிக்குள் வந்து காத்திருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். கோவையில் பெரிதாகப் பிரச்னைகள் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்" என்றார்.

19 Feb 2022 11 AM

`ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர்!' - மதுரையில் பரபரப்பு

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண் ஒருவரை வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவர், ``முகம் சரியாகத் தெரியவில்லை. அதனால் ஹிஜாபை கழற்றிவிட்டு வாருங்கள்" எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வாக்குச்சாவடியைவிட்டு வெளியேற்ற முயன்றனர். பின்னர், தேர்தல் அலுவலர்கள் பாஜக முகவரை வெளியேற்றினர். அதனால், அங்கு பதற்றம் தணிந்தது.

19 Feb 2022 10 AM

வாக்களித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், அதிகாரிகள் எனப் பலரும் தங்களின் வார்டுகளில் வாக்குகளைப் பதிவு செய்துவருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின், மனைவியுடன் வந்து, வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடன் பேசுகையில், ``நான் எனது ஜனநாயகக் கடமையைச் செய்திருக்கிறேன். மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகள் மூலம்தான் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றன. எனவே, மக்கள் கட்டாயம் தங்களின் வாக்குகளைச் செலுத்த வேண்டும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

செய்தியாளர்கள் கோவையில் நேற்று நடைபெற்ற போராட்டம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, ``கோவையில் அதிமுக-வினர் சொல்வதுபோல் எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. தோல்வி பயத்தில் இதுபோல் பேசிவருகிறார்கள். தோல்விக்கான காரணத்தைச் சொல்ல அவர்கள் நாடகம் நடத்துகிறார்கள். அவர்கள் ராணுவம் வர வேண்டும் எனக் கேட்கிறார்கள். ராணுவம் வரும் அளவுக்கு இங்கு எதுவும் நடைபெறவில்லை” என்றார்.

19 Feb 2022 10 AM

வாக்களித்த அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள்:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கைச் செலுத்தினார்.

திருச்சி மாநகராட்சி 54 -வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள வெஸ்ட்டரி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காத்திருப்பு.

திருச்சி சிவா
திருச்சி சிவா

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

தூத்துக்குடியில் மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வாக்களித்தார்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தன் வாக்கைப் பதிவுசெய்தார்.

கே.டி.ராஜேந்திர பாலாஜி
கே.டி.ராஜேந்திர பாலாஜி

திண்டிவனம் நகராட்சி: பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் ரொட்டிக்காரத் தெருவிலுள்ள தாகூர் பள்ளியில் தன் வாக்கைப் பதிவுசெய்தார்

ராமதாஸ்
ராமதாஸ்
19 Feb 2022 8 AM

``குறை கூறுவதால்தான் அவர் முன்னாள் முதல்வர்” - கே.என்.நேரு

திருச்சி, தில்லைநகர் வார்டு 22-க்குட்பட்ட மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும். சேலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருச்சி மாநகராட்சியில் 1,300 கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். திருச்சி மாநகராட்சியிலும் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

நகர்ப்புற தேர்தல் முறையாக நடைபெறவில்லை என முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியிருப்பது தொடர்பான கேள்விக்கு, ``குறை கூறுவதால்தான் அவர் முன்னாள் முதல்வர்” என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. இந்த முறை திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கோவையில் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

19 Feb 2022 7 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்தார் நடிகர் விஜய்!

சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் தனது வாக்கைப் பதிவுசெய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க அவர் சைக்கிளில் வந்தது அதிகம் கவனம் ஈர்த்த நிலையில், இந்த முறை காரில் வந்திருந்தார்.

அதே போன்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் தங்களின் வாக்குச்சாவடிகளில், காலையில் தங்களின் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

19 Feb 2022 7 AM

தொடங்கியது வாக்குப்பதிவு!

85 வயது மூதாட்டி சுப்புலட்சுமி.
85 வயது மூதாட்டி சுப்புலட்சுமி.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கோவை சித்தாபுதூர் வாக்குச்சாவடி மையத்தில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார் 85 வயது மூதாட்டி சுப்புலட்சுமி.

19 Feb 2022 6 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குகிறது!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரங்களெல்லாம் நேற்று முந்தினம் மாலை முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புகளெல்லாம் தேர்தல் ஆணையத்தால் பலப்படுத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்க இருக்கிறது.

சில புள்ளி விவரங்கள்..

மொத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

மாநகராட்சி - 21

நகராட்சி - 138

பேரூராட்சி - 490.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
Photo: Ashok Kumar / vikatan

21 மாநகராட்சிகளிலுள்ள மொத்த வார்டுகள் - 1,374, இவற்றில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 4, தேர்தல் நடக்கும் வார்டுகளின் எண்ணிக்கை - 1,370, போட்டியிடுவோர் - 11,196.

138 நகராட்சிகளிலுள்ள மொத்த வார்டுகள் - 3,843, இவற்றில், போட்டியின்றி தேர்வானவர்கள் - 18, தேர்தல் நடக்கும் வார்டுகள் - 3,825, போட்டியிடுவோர் - 17,922.

490 பேரூராட்சிகளிலுள்ள வார்டுகள் - 7,609, இவற்றில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 196, தேர்தல் வார்டுகள் - 7,412, போட்டியிடுவோர்- 28,660.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மொத்த வார்டுகளில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 218.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

மொத்தமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள வார்டுகள் - 12,607. இவற்றில் போட்டியிடுவோரின் மொத்த எண்ணிக்கை - 57,778.

காஞ்சிபுரம் 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டதால் இந்த வார்டுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு வேட்பாளர் அனுசுயா மற்றும் ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி வேட்பாளர் ஐயப்பன் உயிரிழந்ததால் இந்த வார்டுகளுக்குமான வாக்குப்பதிவும் தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம், முதல்நிலை பேரூராட்சியின் 12-வது உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8-வது வார்டில் யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism