Published:Updated:

ஆழ்வார்பேட்டை வார்டுகளில் அ.தி.மு.க - தி.மு.க தொண்டர்கள் இடையே மோதல்!

ஆழ்வார்பேட்டை அ.தி.மு.க-தி.மு.க தொண்டர்கள் மோதல்

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் திமுக - அதிமுக-வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆழ்வார்பேட்டை வார்டுகளில் அ.தி.மு.க - தி.மு.க தொண்டர்கள் இடையே மோதல்!

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் திமுக - அதிமுக-வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
ஆழ்வார்பேட்டை அ.தி.மு.க-தி.மு.க தொண்டர்கள் மோதல்

இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தலைநகர் சென்னையில் உள்ள பல்வேறு வாக்குப்பதிவு மையங்கள் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு, கட்சித் தொண்டர்களிடையே மோதல் என பரபரப்பாக காணப்படுகின்றன.

போராட்டத்தில் அ.தி.மு.க-வினர்
போராட்டத்தில் அ.தி.மு.க-வினர்

அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தி.மு.க-வினர் அதிக அளவில் உள்ளே இருப்பதாக புகார் கூறி அ.தி.மு.க-வினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க-வினர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிரமுகர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, அ.தி.மு.க தொண்டர்கள், வேட்பாளர்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி ஜெயவர்தன் காவல்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பின்னர், புகாரை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். வாக்குச்சாவடி முன் அ.தி.மு.க-வினர் ஒன்று கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடி
ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடி

அதேபோல, ஆழ்வார்பேட்டை 122-வது வார்டிலும் தி.மு.க, அ.தி.மு.க-வினர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீபா வாசு என்பவரின் இரண்டாவது மகன் அருண் என்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பரமானந்தம் என்பவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க வேட்பாளரை கைது செய்யக்கோரி, அ.தி.மு.க-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துர்கா, பள்ளி வாசலில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருகிறார். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism