Published:Updated:

Live Updates: ஹரியானாவில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்!

சோனியா காந்தி - மோடி
சோனியா காந்தி - மோடி
24 Oct 2019 2 PM

பா.ஜ.க - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

ஹரியானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ச்சியாக இழுபறி நீடித்து வரும் நிலையில் அங்கு எந்தகட்சிக்கும் பெரும்பான்மை கிடைகாத் சூழல் உருவாகியுள்ளது. தற்போதய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க 38 இடங்களிலும், காங்கிரஸ், 33 இடங்களிலும், இதர கட்சிகள் 19 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

24 Oct 2019 11 AM

ஹரியானாவில் தொடரும் இழுபறி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க கூட்டணி 160 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் ஹரியானாவில் பா.ஜ.க முன்னிலையில் இருந்தாலும் பல தொகுதிகளில் கடும் இழுபறி நீடிக்கிறது. தற்போதய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க 41 இடங்களிலும், காங்கிரஸ், 29 இடங்களிலும், இதர கட்சிகள் 20 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

24 Oct 2019 10 AM

ஹரியானா நிலவரம்!

மகராஷ்டிரா தேர்தல் களத்தில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஹரியானா தேர்தல் களத்தில் காங்கிரஸ் கடும் போட்டி அளித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள முன்னிலை நிலவரப்படி ஹரியானாவில் பா.ஜ.க 44 இடங்களிலும் காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

24 Oct 2019 9 AM

முன்னிலை நிலவரம்!

மகாராஷ்டிரா:

பா.ஜ.க கூட்டணி - 185

காங்கிரஸ் கூட்டணி - 88

ஹரியானா
ஹரியானா
ANI

ஹரியானா:

பா.ஜ.க கூட்டணி - 43

காங்கிரஸ் கூட்டணி - 36

24 Oct 2019 9 AM

பெரும்பான்மை எண்ணிக்கையை தாண்டி பா.ஜ.க முன்னிலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க தற்போது 173 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஹரியானா தேர்தலில் பா.ஜ.க 50 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இங்கு ஆட்சி அமைக்க 46 இடங்கள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.

24 Oct 2019 8 AM

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் தொடக்கம் முதலே பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

24 Oct 2019 8 AM

முன்னிலை நிலவரம்!

மகாராஷ்டிரா:

பா.ஜ.க கூட்டணி - 169

காங்கிரஸ் கூட்டணி - 66

ஹரியானா:

பா.ஜ.க கூட்டணி - 50

காங்கிரஸ் கூட்டணி - 24

24 Oct 2019 8 AM

மகாராஷ்டிராவில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது வெளியாகும் முன்னணி நிலவரங்களின்படி தொடக்க வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா:

பா.ஜ.க கூட்டணி - 59

காங்கிரஸ் கூட்டணி - 16

ஹரியானா:

பா.ஜ.க கூட்டணி - 20

காங்கிரஸ் கூட்டணி - 04

24 Oct 2019 8 AM

ஹரியானா

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 1,169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,83,90,525.

24 Oct 2019 8 AM

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு 3,239 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். இங்கு, ஆளும் பா.ஜ.க - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் உள்ளன. இது தவிர, ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற பல கட்சிகள் தனியாகப் போட்டியிடுகின்றன.

24 Oct 2019 8 AM

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றம் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த 21 -ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. நாடுமுழுவதும் இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

மக்களவைத் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி பா.ஜ.க தலைமையிலான அரசு அமைந்த பின்னர் நடக்கும்பெரிய தேர்தல் இது என்று சொல்லலாம். இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க, தனது ஆட்சியைத் தொடருமா அல்லது இடைக்கால தலைவாராக சோனியா காந்தி பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் எழுச்சிபெறுமா என்ற கேள்விகளுக்கு விடை தெரியும் நாள் இன்று.